Sunday 10 March 2013

கணினியில் தேவையில்லாத பைல்களை ஒரே நிமிடத்தில் அடித்து விரட்டும் CCleaner - V3.06

 





நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். உலகளவில் கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.இது  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். 
பயன்கள்: 
  • இந்த மேம்படுத்தப்பட்ட பதிவில் HTML5 பைல்களுக்கேன்றே பிரத்யோகமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த மென்பொருள் குரோம்,பயர்பாக்ஸ், IE மட்டுமின்றி தற்போது OPera மற்றும் சபாரி ஆகிய பிரவுசர்கள் மூலம் நம் கணினியில் உருவாகும் தேவையில்லாத பைல்களையும் முற்றிலுமாக நீக்குகிறது.
  • க்ரோமில் அதிக முறை பார்க்கப்பட URL களை நீக்குகிறது.
  • ஒபேரா உலவியில் கடைசியாக பார்த்த URL களை நீக்கு கிறது.
  • இந்த மென்பொருள் தேவையில்லாத பைல்களை நீக்கி விடுவதால் நம் கணினியில் அதிக காலி இடம் உருவாகும்.
  • புதிய பதிப்பு 64-bit கணினிகளும் உபயோகிக்கும் வரையில் வடிவமைக்க பட்டுள்ளது.
  • இன்னும் பல பயனுள்ள வசதிகள் இந்த மென்பொருளில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

கீழே உள்ள Download லிங்கை  அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

  • தரவிறக்கம் செய்தவுடன் உங்களுக்கு வந்த .exe பைலை இன்ஸ்டால் செய்யுங்கள். 
  • இன்ஸ்டால் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும். 
  • இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும். 
  • இப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். 
  • உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
  • இதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
Download As PDF


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz