Sunday 10 March 2013

உடல் துர்நாற்றமா?

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/12/udal-thurnatrama.html

வணக்கம் நண்பர்களே..!

உடல் துர்நாற்றம் என்பது உலகில் பெரும்பாலானோருக்கு உள்ளதுதான்.. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உடல் துர்நாற்றமுடையவருடன் பேசும்பொழுது, ஒரு வித தர்ம சங்கடம் ஏற்படும்.
சிலர் நன்றாக சோப்புப் போட்டு குளித்திருப்பார்கள்.. வாசனை திரவியங்களையும் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனாலும் அவற்றையெல்லாம் மீறி அவர் அருகில் வந்தாலே அவர்களிடமிருந்து துர்நாற்றம் குடலைப் பிடுங்கும்..

சிலருக்கு அதிக வியர்வையாலும், இந்த துர்நாற்றம் வீசும். சிலர் அருகில் வந்தாலே கற்றாழை வாடை கப்பென்று மூக்கை துளைக்கும்..

இதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் உடலில் வேண்டாத நீர்மங்கள் வெளியேறுவதுதான்..

சில உணவுகளை வகைகளைச் சேர்ப்பதால் கூட துர்நாற்றம் வீசும்.

உதாரணமாக Red Meat என்று சொல்லக்கூடிய பீஃப், மட்டன் போன்றவைகளை சேர்ப்பதன் மூலம் இந்த துர்நாற்றம் வீசும். காரணம் இது ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதன்மூலம் ஏற்படும் கெட்ட நீரானது வியர்வையாக வெளியேறும். அதனால் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். முடிந்தளவு இந்த வகை உணவுகளை குறைத்துக்கொள்வது நலம்.

பால்பொருட்கள் அனைத்தும் துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமைகிறது. இரவில் பால் குடித்துவிட்டு, பிறகு நன்றாக பல் துலக்கி, வாயைக் கொப்பளித்துவிட்டு படுக்கச் சென்றால் பல்லுக்கும் நல்லது.. பிறரையும் நம் உடல் துர்நாற்றத்திலிருந்து காப்பாற்ற முடியும்.

பச்சை வெங்காயம், வெள்ளைப் பூன்று போன்ற வெங்காய வகைகளை அதிகம் சேர்த்துக்கொண்டாலும் உடல் துர்நாற்றம் ஏற்படும். இவைகள் உடலுக்கு நன்மை செய்வதுதான் என்றாலும், கோடைக்காலங்களில் அதிகளவு பச்சை வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்ப்பதை தவிர்க்கலாம்.

அதேபோல் பார்க்கர், பீட்சா போன்ற உடனடி உணவு வகைகளையும், FAST FOOD போன்ற வறுத்த உணவுகளையும் தவிர்ப்பது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல்.. உடல் துர்நாற்றம் ஏற்படாமலும் இருக்கச் செய்யும்.

சிறுநீரக கோளாறுகள், போன்ற இதர காரணங்களாலும் உடல் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே தகுந்த மருத்துவரை அணுகி உடல் துர்நாற்றத்திற்கான காரணத்தை அறிந்து அவற்றை தடுக்க முயற்சிப்பது சிறந்த வழி..

நன்றி..நண்பர்களே..!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz