Thursday 28 March 2013

குழந்தையின் கண்களை பாதுகாக்க



கோடை காலத்தில் குழந்தையின் கண்களை பாதுகாக்க
கோடைகாலத்தில் கண் வழியாக நோய்கள் பரவ
வாய்ப்புகள் அதிகம். அதாவது வெளியில் செல்லும் போது தூசி, புற ஊதாக் கதிர்கள்
போன்றவை கண்களை பாதிக்கிறது. அதனால் கண்களை பாதுகாப்பது மிக அவசியமான ஒன்று.
குழந்தைகளுக்கு கண் பாதுகாப்பு: பள்ளிக்குச் செல்லும்
குழந்தையாக இருந்தால் கோடைகாலத்தில் அனைத்து குழந்தைகளும் அதிக நேரம் கடற்கரைக்கு
செல்வார்கள் அல்லது வெளியில் சென்று விளையாடுவார்கள்.
அவ்வாறு விளையாடுகின்ற போது வெயிளில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள்
மற்றும் விளையாடும் போது கண்களில் படியும் தூசி போன்றவை குழந்தைகளின் கண்களில்
பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆராய்ச்சி ஒன்றின் மூலம் குழந்தைகளின் கண்கள் மட்டும்மல்ல அவர்களின் தோல்களையும்
சூரிய ஒளி பாதிப்பிற்க்குள்ளாக்கும், மேலும் சிறுவர்களின் கண்புரை மற்றும் மாகுலர்
போன்றவைகளின் மூலம் நோய்கள் உருவாகும். அவை கண்களுக்கு மேலும் ஆபத்தை அதிகரிக்க
செய்யும் என தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சன் கிளாசஸ் அணிய வேண்டும்: இளம் குழந்தைகள்
குறிப்பாக சன்கிளாசஸ் அணியவேண்டும். நம் அன்றாட வாழ்கையில் வெளிப்புறங்களில் தான்
அதிக நேரம் வெலவிடுவதால் கண்களில் நோய் தொற்று ஏற்படலாம்.
பல கடைகளில் சில்லறை விற்பனையில் விலை மலிவாகவே சன்கிளாசஸ் வாங்கலாம், ஆனால்
நீங்கள் வாங்கும் சன்கிளாசஸ் யுவிபி மற்றும் ய-வுஏ கதிர்வீச்சுகளை தடுக்குமா என
ஆராய்ந்து உறுதி செய்த பின் வாங்க வேண்டும்.
அனைத்து சன்கிளாசஸ்சும் யுவிபி யை தடுக்ககூடியது, ஆனால் சில சன்கிளாசஸ் ய-விஏ
தாக்கத்தினை தடுக்காத விதமாகவே அமைந்துள்ளது.
பந்து விளையாட்டுக்கு பாதுகாப்பு கண்ணாடிகள் அணிய வேண்டும்: பந்து
விளையாட்டுக்கு பாதுகாப்பு கண்ணாடிகள் அணிய வேண்டும் என அமெரிக்கன் அகாடமி ஆஃப்
ஆப்தல்மொலாஜி தெரிவிவிக்கிறது.
குறிப்பாக குழந்தைகள் டென்னிஸ், பேஸ்பால், கூடைப்பந்து மற்றும் ராக்கேட் போன்ற
விளையாட்டுகளை விளையாடும் போது, பாலிகார்பனேட் கண்ணாடி அவசியம் அணிய வேண்டும் என
பரிந்துரைக்கின்றனர்.
குழந்தையின் கண்களில் மணல் இருந்தால்: உங்கள் குழந்தையின்
கண்களில் விளையாடும் போது மணல் விழுந்து இருந்தால் குழந்தையை கண்களில் தேய்க்க
விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடனே குழந்தையின் கண்களில் தண்ணீர்விட்டு மணலை நீக்கவேண்டும். மணல் கண்களில்
விழுந்த நேரத்தில் குழந்தைகளை அழவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். இந்த வழிமுறைகள்
வேலை செய்யவில்லை என்றால், மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
குளோரின் அளவு சரிபார்க்க வேண்டும்: நீச்சல் குளத்தில் கொஞ்சம்
குளோரின் இருந்தால் கூட பாக்டீரியா வளர வாய்ப்பு அதிகம், அதன் மூலம் கண்ணில் நோய்
தொற்று உண்டாகும், மேலும் நீரின் தன்மையை எதிர்வினையாக்கும், நீச்சல் குளத்தில்
அதிகமாக குளோரின் இருந்தால் ஒரு லேசான அமில எரிச்சலை கண்களில் ஏற்பட்டு கண்களுக்கு
பாதிப்பு நேரிடும்.
எனவே கண்களை மிகுந்த பாதுகாப்புடன் கவணிக்க வேண்டும். வெயிலில் இருந்து கண்களை
பாதுகாக்க தரம் வாய்ந்த சன்கிளாசஸ் வாங்கி அணிந்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz