Thursday, 28 March 2013

போதிய நேரம் தூங்காத சிறுவர்களின் உடல் பருமனைடையும்: ஆய்வில் தகவல்

போதிய நேரம் தூங்காத சிறுவர்களின் உடல் பருமனைடையும்: ஆய்வில் தகவல் இரவு நேரங்களில் போதிய அளவு தூங்காத சிறுவர்களின் உடல் பருமடைகின்றது. 3 வயது முதல் 7 வயது வரை உள்ள 244 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. பி.எம்.ஜே இணையத்தளத்தில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் உரிய அளவு தூக்கம் இல்லாத சிறுவர்களுக்கு உடல் பருமன் ஆவதுடன் இதர உடல் நலக்கோளாறுகளும் ஏற்படுகின்றன.
ஆய்வின் போது 3 – 5 வயது காலகட்டத்தில் 6 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறுவர்களின் உடல் எடை, உயரம், உடல் கொழுப்பு விவரம் கணக்கிடப்பட்டன. அதே போன்று சிறுவர்களின் தூக்க விவரம் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவையும் பதிவு செய்யப்பட்டன.
சாப்பிடுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் ஹோர்மோன் மாற்றம் காரணமாக பசி நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்பும் சிறுவர்கள் இரவில் நன்றாக தூங்க வேண்டும் என ஆய்வினை மேற்கொண்ட வார்விக் பல்கலைகழக பேராசிரியர்கள் பிரான் செஸ்கோ காபுசியோ மற்றும் மிச்லே மில்லர் தெரிவித்துள்ளனர்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இரவில் 11 மணி நேரம் தூங்க வேண்டும் என பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவத்திற்கான றொயல் கல்லூரி மருத்துவர் மாகோனோசி அறிவுறுத்தி உள்ளார்.
தூக்க குறைபாடு காரணமாக ஞாபக மறதி, நடத்தை மாற்றம், பள்ளி செல்வதில் குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz