Thursday 28 March 2013

இதய நோய்களை அதிகரிக்கும் கொலஸ்ட்ரோலை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

இதய நோய்களை அதிகரிக்கும் கொலஸ்ட்ரோலை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை இருதய நோய்க்கான வாய்ப்புக்களை அதிகரிக்கக் கூடிய அல்ட்ரா பேட்(ultra bad) கொலஸ்ட்ரோலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக இரத்தத்தில் காணப்படும் கெட்ட கொலஸ்ட்ரோலை விட இது தடிப்பானது. இது இருதயத்துக்கான இரத்த நாளங்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியது.
இரண்டாம் நிலை நீரிழிவு நோயின் பாதிப்புக்கு ஆளாகியுள்ள முதியவர்கள் மத்தியிலேயே இது பெரிதும் காணப்படுகின்றது. ஏற்கனவே இது வருடாந்தம் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்துகின்றது.
வேர்விக் பல்கலைக்கழக ஆய்வாளர்களே இந்தப் புதிய கொலஸ்ட்ரோல் வகையைக் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு வகையான கெட்ட கொலஸ்ட்ரோல் அல்லது LDL பற்றிய விரிவான ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது.
இந்தப் புதிய கொலஸ்ட்ரோலை MGmin-LDL எனக் குறியிடுகின்றனர். சாதாரண LDLல் உள்ளதிலும் பார்க்க சிறிய ஆனால் அடர்த்தியான சர்க்கரை துணிக்கைகள் இதில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயத்துக்கான இரத்த நாளங்களில் ஆபத்தான கொழுப்புப் படிவுகள் ஏற்பட இது காரணமாகின்றது. இவற்றின் படிவுகள் அதிகரிக்க அதிகரிக்க இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த ஓட்டமும் தடைப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz