Tuesday 19 March 2013

எந்த தளத்தில் இருந்தும் ஆன்லைன் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?


ஆன்லைன் வீடியோக்களை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் நிறைய Youtube, Dailymotion, Vimeo போன்ற வீடியோ தளங்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்யும் வசதியை தருகின்றன.
மற்ற தளங்களில் உள்ள வீடியோக்களை நம்மால் பெரும்பாலும் டவுன்லோட் செய்ய இயலாது. மாறாக மிக அதிகமான தளங்களில் இருந்து எப்படி வீடியோவை டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம்

இதற்கு நீங்கள் Firefox உலவியை பயன்படுத்த வேண்டும். அதில் Download Helper என்ற Add-on பயன்படுத்தினால் எந்த வீடியோவை வேண்டும் என்றாலும் தரவிறக்கம் செய்யலாம்

தரவிறக்க இணைப்பு - Video DownloadHelper 

Add To Firefox என்பதை கிளிக் செய்தால் உங்கள் உலவியில் இது Add ஆகி விடும். அதன் பின்னர் ஒரு உலவியை close செய்து விட்டு ஓபன் செய்து குறிப்பிட்ட தளத்துக்கு சென்று வீடியோவை ஓடவிடுங்கள்

உதாரணமாக கடல் படத்தில் "நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சுருக்கேன்" என்ற பாடல் MTV தளத்தில் தான் முழுமையாக உள்ளது. அதன் இணைப்புNenjukulle (Full Song)

இதை உங்கள் Firefox உலவியில் திறந்து வீடியோ ஓடும் போது Address Bar பக்கத்தில் கீழே படத்தில் உள்ளபடி ஒரு Plugin ஒன்று பலூன் போல சுற்றிக்கொண்டிருக்கும்அதன் அருகில் ஒரு அம்புக்குறி இருக்கும்.

http://3.bp.blogspot.com/-B1HPEjtbwrU/UJoDWoLVHtI/AAAAAAAAJdo/f0Ki_r0iA6o/s1600/download+helper.png


அம்புக்குறியை கிளிக் செய்தால் டவுன்லோட் செய்து  விடலாம்

http://2.bp.blogspot.com/-ddfgRX0F7xI/UJoDeecKHEI/AAAAAAAAJdw/Gl3uvJ3EmSM/s1600/download+video.png

இது Flv Format - இல் டவுன்லோட் ஆகும். வேறு ஏதேனும் Format வேண்டும் எனில் Download & Convert என்பதை தெரிவு செய்யுங்கள்

மற்றபடி நீங்கள் Youtube, Dailymotion, Vimeo போன்ற தளங்களிலும் இதை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட தளத்தில் இருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை என்றால் அந்த தகவலை நீங்கள் இந்த Plugin Developer களுக்கு தெரிவிக்கலாம்Submitting a site




No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz