Sunday 10 March 2013

லைட்டிங் எஃப்க்ட் கொடுப்பது எப்படி? - போட்டோஷாப்

 
ஒவ்வொருவருக்கும் போட்டோஷாப்பை எளிதாக்குவதே எமது நோக்கம்.. படத்தில் உள்ளது போல் உங்கள் படத்தை லைட்டிங் எஃபக்ட் கொடுத்து அழகூட்டலாம்.. எப்படி என்று பார்போமா?

 உங்களுக்கு தேவையான புகைப்படத்தை போட்டோஷாப்பில் கொண்டு வாருங்கள்.அதை டூப்ளிகேட் செய்து கொள்ளவும்.. (Ctrl+J)




டூப்ளிகேட் லேயரை செலக்ட் செய்து கொள்ளவும்..  (இங்கு படத்தை டூப்ளிகேட் செய்வது, எதற்கென்றால் ஒரிஜினல் புகைப்படம் எக்காரணம் கொண்டு சேதமடையாமல் இருப்பதற்காகத்தான்)



முதலில் பில்டர்(Filter) செல்லவும்..



அங்கு உருவாகும் மெனுவில் Render தேடவும்.. அதில் விரியும் மெனுவில் Lighting Effects.. என்றிருக்கும்.. அதை கிளிக் செய்யவும்..




கிளிக் செய்தவுடன் இதைப்போன்ற விண்டோ ஒன்று திறக்கும்..

 1. படத்தில் காட்டியுள்ளபடி Style என்றிருக்கும் இடத்தில் Blue Omni - யை தேர்வு செய்யவும்..

2. light type -ல் Spotlight -ஐ தேர்ந்தெடுக்கவும்.. On என்ற இடத்தில் டிக் கொடுக்கவும்..படத்தில் உள்ளது போல் மற்ற  அளவுகளை கொடுக்கவும்..

3. தங்களுக்கு எந்த திசையில் லைட்டிங் எஃப்க்ட் கொடுக்க வேண்டுமோ அதற்கான திசையில் திருப்பவதற்கு ஏதுவாகவும், ஒளியை விரவுவதற்கும் மையப்புள்ளிகள் கொடுக்கப்பட்டியிருக்கும்.. அதில் பாய்ண்ட்ரை வைத்து இழுத்தால் அதற்கு தகுந்த மாதிரி விரிவுபடுத்தலாம்.. சுருக்கலாம்.. தங்களின் ரசனைக்கேற்ப படங்களை ஒளிவிளைவு (Light Effect) கொடுத்து கொண்டாடுங்கள்...மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்
இறுதியாக படம் இப்படிக் காட்சியளிக்கும்..



பாருங்கள் வித்தியாசத்தை.. கூறுங்கள் தங்களின் மேலான கருத்துக்களை.. புரியவில்லை என்றால், தெளிவாக இல்லையென்றால் சுட்டிக்காட்டவும்..

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz