Monday 11 March 2013

பிளாக்கரில் இணைப்புகள் அனைத்தையும் புதிய விண்டோவில் திறக்க

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/08/open-blog-links-in-new-window.html
வணக்கம் நண்பர்களே..! பிளாக்கர் டிப்ஸ் எழுதுவதென்பது இன்று பல பிளாக்கர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. நல்ல புரிதல்களுடன் புதிய வாசகர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுபவர்கள் ஒரு சிலரே. நம்முடைய தங்கம்பழனி வாசகர் ஒருவர் பிளாக்கர் தளத்தில் ஒவ்வொரு இணைப்பையும் கிளிக் செய்யும்போது அடுதடுத்த புதிய விண்டோவில் திறக்கச் செய்ய வேண்டும் என்ன செய்யலாம்? என்று கேட்டிருந்தார். இதோ அவருக்கான பதில்..

Open blog links in new window
பிளாக்கரில் லிங்க் புதிய விண்டோவில் திறக்க
உங்கள் பிளாக்கர் உள்ள ஒவ்வொரு இணைப்பையும் கிளிக் செய்யும்போது உங்களுக்கு புதிய விண்டோவில் திறக்கச் செய்ய எளிய முறை ஒன்று உள்ளது.

உங்கள் பிளாக்கர் Dashboard சென்று Design==>Edit HTML==> செல்லுங்கள்.
இப்போது திறக்கும் வார்ப்புரு நிரலில் <head> என்பதை தேடுங்கள்.

அதற்கு கீழே வருமாறு கீழுள்ள நிரல்வரித்துண்டை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிடுங்கள்.
<base target='_blank'/>

அதாவது இப்படி இருக்க வேண்டும்.
<head> 
<base target='_blank'/>

இப்போது இறுதியில் உள்ள Save Template என்பதனைச்சொடுக்கி செய்த மாற்றத்தினை சேமித்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

இந்த முறையானது ஒரு பக்கம் திறக்க அதிக நேரமெடுப்பதாக இருப்பின், அந்த இணைப்பை கிளிக் செய்துவிட்டு, முழுவதும் திறக்கும் வரை காத்திருக்காமல் வேறு பக்கத்தை பார்வையிடலாம்.

இனி நீங்கள் உங்கள் பிளாக்கில் உள்ள ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கும்போதும் ஒவ்வொரு இணைப்பும் புதிய விண்டோவில் திறக்கும்.

இந்த முறையையும் நீங்கள் கையாளலாம்.

பிளாக்கர்(blogger) அல்லது ஒரு வலைத்தளத்தில்(websites) நீங்கள் ஒரு இணைப்புப் பக்கத்தை புதிய விண்டோ அல்லது புதிய டேபிள் திறக்க வேண்டும் என நினைக்கும்போது Ctrl பட்டனை அழுத்தியவாறே மௌசால் அந்த இணைப்பை கிளிக் செய்யும்போது இணைப்பானது புதிய டேபில் திறக்கும். (Open in new Window)==> (Ctrl+Click)

புதிய விண்டோவில் இணைப்பைத் திறக்க விரும்பினால் Shift விசையை அழுத்தியவாறே மௌசால் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் சொடுக்கிய இணைப்புப் பக்கமானது புதிய விண்டோவில்(Open in New Window) திறக்கும். Open in New Window==>(Shift+click)


இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz