Monday 11 March 2013

பிளாக்கரில் post summary வசதி கொண்டுவர...




http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/07/how-to-make-read-more-on-blogger-post.html
புதிய வலைப்பதிவர்களுக்கு பயன்படும் பதிவு

how to create readmore function on blogger blogவணக்கம் நண்பர்களே..! பிளாக்கர் தளத்தை இப்போது கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மொழி, நாடு என்ற பேதமின்றி, இணையத்தில் உலவுபவர்கள் அனைவருக்குமே பிளாக்கர் தளத்தைப் பற்றி அறிந்துகொண்டுள்ளனர்.


"ஏழைகளின் ஊட்டி ஏற்காடு" , "ஏழைகளின் ஆப்பிள் தக்காளி"என்பதைப் போல உலகிலுள்ள அனைவரும் விரும்புவதும்,
பணம் செலவில்லாமல், ஏழை எளியவர்களும் பயன்படுத்துவது  இந்த Blogger தளத்தைதான். காரணம் பெரும்பாலானோருக்குத் தெரியும். இது பயன்படுத்துவதற்கு மிக  எளிதான ஒன்றாகும்.  மேலும் முற்றிலும் இலவசம். இதற்காக google நிறுவனதிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். மேலும் இந்த தளமானது Google நிறுவனத்தின் உபதளம் என்பதாலும் பெரும்பான்மையானோரால் இத்தளம் மிகவும் விரும்பப் படுகிறது.

சரி..இந்த பிளாக்கர் தளத்தைப் பயன்படுத்தி நமக்கென ஒரு பிளாக்கை உருவாக்கிக்கொண்டு அதில் பதிவுகளை எழுதி வெளியிட்டு வருவோம்.. இப்போது நிறைய புதிய பிளாக்கர்கள் தினம்தோறும் வந்துக்கொண்டே இருக்கிறார்கள்..

தங்களின் படைப்புகளை ஒரு தேரந்த எழுத்தாளனைப் போல, கவிஞரைப் போல எழுதி அதை வெளியிட்டுவருகின்றனர். இதில் இவர்களுக்கு உள்ள ஒரே பிரச்னை என்னவெனில் பிளாக்கர் தளத்தை முழுமையாகப் பயன்படுத்த தெரியாததுதான்.

நேரடியாக பதிவிற்குள் சென்றுவிடுகிறேன். பிளாக்கர் தளத்தின் பதிவெழுதும் பெட்டியில் Post summary (Read more) Function கொண்டு வருவது எப்படி எனப் பார்ப்போம்.
  • முதலில் பதிவெழுதுப் பெட்டியைத் திறந்துகொள்ளுங்கள்.
  • பிறகு அதில் பதிவை முழுவதுமாக எழுதி முடியுங்கள்.
  • உங்களுக்கு எந்த இடத்தில் post summary வேண்டுமோ.
  • அதாவது முகப்புப் பக்கத்தில் பதிவினுடைய வரிகள் எத்தனை தெரியவேண்டுமோ அத்தனை வரிகளை விட்டு கீழே குறிப்பிட்டுள்ள Jumb Break என்ற Icon -ஐ சொடுக்கவும்..
  • இப்போது உங்கள் பதிவை Publish Post என்பதை அழுத்தி Publish செய்துவிடுங்கள்.. அவ்வளவுதான் முடிந்தது.
மற்றொரு முறை:

இந்த முறையில் Post summary உருவாக்க...முதலில் உங்கள் பதிவெழுதும் பெட்டியை Edit Html முறைக்கு மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது பதிவின் முதல் பத்திக்கு அடுத்து அல்லது உங்களுக்கு விருப்ப பட்ட இடத்தில் <!--more--> என்பதை கொடுக்கவும். பிறகு publish Post என்பதைச் சொடுக்கி பதிவை வெளியிடவும். இந்த நிரல் வரிக்கு முன்னால்(மேலே) உள்ள வரிகளனைத்தும், உங்கள் தளத்தின் முகப்பு பக்கத்தில் தோன்றும்.

இப்போது உங்களுடைய பதிவின் Post summary-ஐ நீங்களே உருவாக்கிவிட்டீர்கள்.

ஒவ்வொரு பதிவிற்கும் இவ்வாறு Jumb Break கொடுத்து post summary உருவாக்குவதால் முகப்புப் பக்கத்தில் நிறையப் பதிவுகளை வாசகர்கள் படிக்கும்படியான வசதியை ஏற்படுத்தி தர முடியும். அத்தோடு உங்கள் முகப்பு பக்கமும் அழகுற காட்சியளிக்கும்.

நன்றி நண்பர்களே.. புதிய பதிவர் ஒருவர் தாம் கேட்கும் சந்தேகங்களை விளக்கினால் மட்டும் போதுமானதாக இருக்காது. அதைப் பற்றி ஒரு பதிவாகவும் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். அப்போதுதான் தன்னைப் போல் புதியவர்கள் யாரேனும் வந்தாலும் இப்பதிவினைப் பார்த்து அவரும் தெரிந்துகொள்ள முடியும் எனவே சிறிய விடயமாக இருந்தாலும் அதை ஒரு பதிவாகவே எழுதிவிடுங்கள். பிறிதொரு சமயம் தேவையெனில் மீண்டும் அப்பதிவைப் பார்த்து சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என்றார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க இப்பதிவு எழுதப்பட்டது. நன்றி மகேஷ் அவர்களே..! நன்றி நண்பர்களே..!

இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz