Monday 18 March 2013

பார்முலா எந்தவித மாற்றமும் இன்றி பேஸ்ட் செய்திட

எக்ஸெல் தொகுப்பில் ஒரே பார்முலாவினை பல செல்களில் பயன்படுத்த என்ன செய்கிறீர்கள்? ஒரு இடத்தில் அமைத் துவிட்டு அப்படியே மற்ற இடங்களில் காப்பி செய்கிறீர்களா? அப்படி காப்பி செய்கையில் செல் எண்களில் மாற்றம் ஏற்படாமல் இருக்கிறதா? மாற்றம் ஏற்படுகிறது, இல்லையா? எந்த இடத்தில் பேஸ்ட் செய்கிறோமோ அந்த செல்லுக்கு ஏற்றவகையில் மாறுகிறது. எந்த மாற்றமும் இல்லாமல் பேஸ்ட் செய்திட என்ன செய்யலாம்? இதற்கு பல வழிகளில் தீர்வு இருந்தாலும் கீழே தரப்பட்டுள்ள வழி ஓரளவிற்குச் சிறந்ததாக உள்ளது. அதனைப் பார்ப்போமா!


முதலாவதாக செல்லை செலக்ட் செய்வதைக் காட்டிலும் செல்லில் உள்ள பார்முலாவினை செலக்ட் செய்திடுங்கள். இதற்கு செல் உள்ளாகச் சென்று பார்முலாவினை மட்டும் செலக்ட் செய்திடலாம்; அல்லது கர்சரை செல் உள்ளே சென்று எப்2 கீயை அழுத்தினால் பார்முலா மட்டும் செலக்ட் செய்யப்படும்; அல்லது நேராக மேலே பார்முலா பார் சென்று அதனை செலக்ட் செய்திடலாம். இதனை செலக்ட் செய்து விட்டால் பின் காப்பி செய்திடுங்கள். இனிதான் முக்கியமான வேலை உள்ளது. இம்முறையில் காப்பி செய்தவுடன் பின்னர் எஸ்கேப் கீ அல்லது என்டர் கீயை ஒரு முறை அழுத்தவும். இந்த செயல்பாடு அவசியம் சரியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.


ஏனென்றால் இதன் மூலம் எக்ஸெல் தொகுப்பிற்கு செல்லில் உள்ளதனுடன் உங்கள் வேலை முடிந்து விட்டது என்று அறிவிக்கிறீர்கள். இதனை மேற்கொள்ளவில்லை என்றால் எக்ஸெல் இன்னும் நீங்கள் செல்லில் உள்ளவற்றை எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும். இனி புதிய செல்களுக்குச் சென்று பார்முலாவினை எளிதாக பார்மட்டிங் எதுவுமின்றி, செல் எண்கள் மாற்றமின்றி பேஸ்ட் செய்திடலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz