Wednesday 13 March 2013

எந்த மென்பொருளையும் பிறர் பயன்படுத்தாமல் செய்ய!!

http://anbhudanchellam.blogspot.in/2012/10/blog-post_7206.html
கணணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.

                   
சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.

ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம்.

இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து(password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்து விட வேண்டும்.

பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த மென்பொருளை தடை செய்கிறீர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால்(Drag and drop) கூட போதும்.

இதன் வடிவமைப்பு பயன்படுத்த எளிமையாக உள்ளது. இதை நிறுவத்தேவையில்லை. அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம்.தரவிறக்க சுட்டி



No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz