Monday 4 March 2013

ஃபேஸ்புக் நன்மைகளும் , சில தீமைகளும்... ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்..!!

வணக்கம் நண்பர்களே..! பேஸ்புக் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் ஒரு குழுமமாக சேர்ந்து அரட்டை அடிக்கவும், படித்ததை பகிர்ந்துகொள்ளவும், அனுபவங்களை பகிர்ந்திடவும், நண்பர்கள் தங்களிடையே நட்பைப் பகிர்ந்துகொள்ளவும், நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கவும் என பல்வேறுவிதமாக இந்த சமூகதளமான பேஸ்புக் பயன்படுகிறது. இத்தகைய பயன்மிக்க அற்புத வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருப்பதே பேஸ்புக்கின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம்.

advantage and  disadvantage of facebook
மேலும் வர்த்தக ரீதியாகவும் பேஸ்புக் நல்ல ஒரு சமூக ஊடகமாக செயல்படுவதால்தான் இன்றுவரையும் பேஸ்புக் தன்னிகரற்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இணையம் சார்ந்த எந்த ஒரு தளமானாலும் அதிலும் ஒரு சில குறைபாடுகள் இருக்கும். அந்த வகையில் பேஸ்புக்கிலும் நன்மைகளும், ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. நன்மைகள் பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். தீமைகள்...?????!!!

பேஸ்புக் கணக்கை பாதுகாக்க

முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள பாஸ்வேர்ட் பாதுகாப்பானதாக மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். பொதுவான வார்த்தைகள், பெயர்கள் என இல்லாமல் பாஸ்வேர்ட் அமையட்டும். குறிப்பாக பாஸ்வேர்ட்டுடன் எண்களையும், குறீயீடுகளையும் கலந்து உங்கள் பாஸ்வேர்ட்டை அமையுங்கள். உம்.tH1a*n_ga()M. நினைவில் நிறுத்தக்க வகையில் அவை அமையட்டும். அவ்வாறு நினைவில் இல்லாத வகையில் இருந்தாலும் அவற்றை எழுதி வைத்துக்கொண்டு ஒரு சில முறை பயன்படுத்தினால் அவை தானாவே நினைவில் நின்றுவிடும். இதனால் உங்கள் பாஸ்வேர்ட்டை மற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

பேஸ்புக் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் இவ்வாறு மற்றவர்கள் யூகிக்க முடியாதபடி பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். காரணம் பேஸ்புக் கணக்கு உருவாக்கியபோது கொடுத்த மின்னஞ்சலை மற்றவர்கள் அணுகி பயன்படுத்தும்போது உங்கள் பேஸ்புக் கணக்கையும் பயன்படுத்த முடியும். இது மிக முக்கியமான ஒன்றாகும்.

மற்ற கணினிகள் அல்லது பிரௌசிங் சென்டர்களில் பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தியப் பிறகு உங்களை கணக்கை லாக்அவுட் செய்துவிடுங்கள். மறந்தும் Remember password என்பதை கிளிக் செய்துவிடாதீர்கள். பிரைவேட் பிரௌசிங் முடிந்த பிறகு, browser-ன் cookies, browse history ஆகியவை மறக்காமல் டெலீட் செய்துவிடுங்கள்.

பேஸ்புக் லாகின் செய்ய முதலில் அட்ரஸ் பாரில் www.facebook.com என டைப் செய்து தளத்தைத் திறக்கப் பழகிக்கொள்ளுங்கள். மற்ற இணைப்புகளில் இருந்து கிளிக் செய்து பேஸ்புக் கணக்கில் உள்நுழைவதை தவிருங்கள்.

ஃபேஸ்புக் கணக்கை உருவாக்கும்போது நீங்கள் கொடுத்த Security Question மற்றும் அவற்றிற்கான பதில் மற்றவர்கள் யூகிக்க முடியாதபடி கடினமானதாக இருக்கட்டும். உ.ம். உங்கள் காரின் நிறம் என்ன? உங்கள் பிறந்த தேதி என்ன? உங்களுக்குப் பிடித்த நிறம் என்ன? போன்ற பொதுவான கேள்விகளை தவிர்ப்பது நலம். நீங்கள் இதுவரைக்கும் பாதுகாப்பு கேள்விகளை அமைக்கவில்லை எனில் Account Settings page சென்று முதலில் உங்களுடைய பாதுகாப்புக் கேள்விகளை அமைத்துக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் உள்ள அபாயம்(The risk in Facebook)

அச்சு அசலாக பேஸ்புக் தளத்தைப் போன்றே போலியான தளம் அமைத்து அதில் கவர்ச்சிகரமான தகவல்களை இட்டு மற்றவர்களை கவருகின்றனர். இந்த கவர்ச்சிகரமான தவல்களால்(video or images link) ஈர்க்கப்பட்டு அவர்கள் கொடுக்கும் இணைப்பில் கிளிக் செய்து தொடர்ந்தால் நம்மிடம் சில விபரங்கள் சேகரிக்கப்படும். அதாவது மின்னஞ்சல், முகவரி, செல்பேசி அல்லது தொலைபேசி எண், போன்ற விபரங்களை கேட்டு சேகரிப்பார்கள். பிறகு முடிவில் எதிர்பார்த்த எந்த தகவலும் இல்லாமல் தளத்தில் 'ஙே..!' என விழிப்போம். இத்தகைய செயல்களுக்கு ஆங்கிலத்தில் Survey Scam எனப் பெயர். அதாவது நமக்கு ஆசையைக் காட்டி, நம்மிடமிருந்து நம்மைப் பற்றி தகவல்களை சேகரிப்பதாகும்.

இப்படி சேகரிக்கப்பட்ட தகவல்கள் வியாபார நோக்கத்திற்காகவோ(Business purposes) அல்லது வேறு சில நோக்கத்திற்காகவோ தவறாக பயன்படுத்தக்கூடும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்களை பெரும்பாலும் மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள்.

எனவே முன்பின் தெரியாத புதிய இணைப்புகளைக் கிளிக் செய்து தொடர்ந்து அவர்கள் கேட்கும் விபரங்களை அளிக்காமல் இருப்பது நல்லது.

பேஸ்புக்கில் போலிகள்(Spoofs on Facebook)

போலியான பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏராளமாக பெருகிவிட்டனர். குறிப்பாக பெண்களின் பெயர்களில் நிறைய போலி பேஸ்புக் கணக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகையவர்கள் விரைவில் நிறைய நண்பர்களைச் சேர்த்திருப்பார்கள். காரணம் விரைவில் பிரபல்யம் அடையவேண்டும் என்ற நோக்கம். அல்லது வியாபார நோக்கமாக இருக்கும். இத்தகையவர்களின் ப்ரொபைல் படங்களைப்(Profile pictures) பார்த்தாலே ஓரளவு கண்டுபிடிக்கலாம். பிரபலமான நடிகைகளின் படத்தை Profile Picture படமாக வைத்திருப்பார்கள். Photos களைப் பார்த்தால் ஒன்று அல்லது இரண்டு படங்களுக்கு மேல் இருக்காது. அதேபோல ப்ரொபைல் படமானது வருட கணக்காக மாற்றாமல் அப்படியே வைத்திருப்பார்கள். அதேபோல் பிறந்த நாள் அல்லது வயது இவர்களுக்கு டீன் ஏஜ்(Teen Age) அல்லது குறைந்த வயதாக இருப்பதாகவே இருக்கும். இவையெல்லாம் மற்றவர்களை கவர பெண்களின் பெயரால் ஆண்கள் செய்யும் சாமர்த்தியான செயல்களாகும்.

Profile உள்ள தகவல்கள் முழுமை பெறாமல் இருக்கும். அதாவது ஒன்றிரண்டு மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும். இவர்களின் Activities கவனித்தாலே ஓரளவுக்கு யூகிக்கலாம்.

உண்மையாக பெண்கள் தெரிந்தவர்களுக்கு மட்டுமே Friend Request கொடுப்பார்கள். அநாவசியமாக மற்றவர்களுக்கு Friend Request கொடுக்க மாட்டார்கள். எனவே பெண்கள் பெயரில் உங்களுக்கு Friend Request அதிகம் வந்தால் அவற்றை நன்றாக கவனித்துப் பாருங்கள். நிச்சயம் அது உங்களை கவர்வதற்காகத்தான் இருக்கும். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

பேஸ்புக் தீம்(Change Face book Theme,  Face book Skin) மாற்றம் செய்ய...

நன்மைகளைப் பற்றி பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். அதனால் பேஸ்புக் பற்றிய அழகு குறிப்பு ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன். கடந்த பதிவில் ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் என்பதை பகிர்ந்தேன் அல்லவா? அதைப்போல இல்லை இது.. என்றாலும் பேஸ்புக் தீம்களைப் பற்றியது. அதாவது பேஸ்புக்கின் ஒரிஜினில் தீம் குறிப்பிட்ட ஒரே நிறத்திலேயே (blue back ) இல்லாமல் நீங்கள் விரும்பிய வண்ணத்தில் மாற்றி அமைக்க முடியும். இதற்கு இந்த தளம் சென்று அதிலுள்ள தீம்களில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யுங்கள்..

பிறகு தோன்றும் விண்டோவில் install this style as user script என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பேஸ்புக் skin, theme -ஐ நீங்கள் மாற்றம் செய்துகொள்ளலாம்.




இந்தப் படங்களில் இருப்பதைப் போன்று உங்கள் ஃபேஸ்புக் தீம்களை மாற்றி உங்கள் பேஸ்புக் தோற்றத்தை அழகு செய்யுங்கள். நன்றி.

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz