Tuesday 19 March 2013

ப்ளாக்கரில் புதிதாக +1 Counter வசதி



ப்ளாக்கர் தளத்தில் கூகுள் ப்ளஸ் வசதிகள் ஒவ்வொன்றாக கூகுள் அறிமுகப்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அது நம்முடைய பதிவுகளை எத்தனை நபர்கள் +1 செய்துள்ளார்கள் என்பதை டாஷ்போர்டில் இருந்தே பார்க்கும் வசதி. இதற்கு +1 Counter என்று பெயரிட்டுள்ளது.



Blogger Dashboard => Posts பகுதிக்கு சென்றால் நம்முடைய பதிவுகள் அனைத்தும் தெரியும் அல்லவா? அதில் நமது பெயருக்கு பக்கத்தில் அந்த பதிவை எத்தனை நபர்கள் +1 செய்துள்ளார்கள்? என்ற எண்ணிக்கையை காட்டும். அதை க்ளிக் செய்தால் யாரெல்லாம் +1 செய்துள்ளார்கள் என்பதனை காட்டும்.

குறிப்பு: இந்த வசதியை பெற நீங்கள் உங்கள் ப்ளாக்கில் +1 பட்டனை வைத்திருக்க வேண்டும்.

விரைவில் பேஸ்புக் டைம்லைன் (Facebook Timeline):

அனைவருக்கும் பேஸ்புக் டைம்லைன் என்ற பதிவில் பேஸ்புக் டைம்லைன் பற்றி பார்த்தோம் அல்லவா? அந்த புதிய வசதி பலருக்கு பிடிக்காததால் பலர் அதனை பயன்படுத்தாமல் இருந்தனர். ஆனால் இன்னும் சில வாரங்களில் எல்லாருக்கும் அது அமல்படுத்தப்படவுள்ளது. பிடிக்கவில்லை எனினும் அதனை யாரும் தவிர்க்க முடியாது.

பதிவு சின்னதாக இருப்பதால், பேஸ்புக் ரசிகர்களுக்காக பிரத்யேக கட்டில் படங்கள்.

இது கற்பனை. விற்பனைக்கு அல்ல!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz