Tuesday 15 October 2013

MP3 பாடலில் உங்கள் போட்டோவையும் இனைக்கலாம்.

வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக MP3 பாடலில் ஒரு போட்டோவை எப்படி இனைப்பது என்பது பற்றி பார்க்கலாம். உங்களில் சிலராவது சில MP3 பாடல்களை விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கும் போது விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் அந்த பாடலின்
படத்துடைய போட்டோவோ அல்லது பாடிய நபரின் போட்டோவோ பார்த்திருக்க கூடும் இல்லையா? இதைப்பற்றி சிலருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு எப்படி என்ற கேள்வி இருக்குமேயானால் அதற்கான விடையைத்தான் இப்போது பார்க்க போகிறோம். இதற்கான வழிமுறைகள் மூன்று விதங்களில் இருக்கிறது நாம் முதல் இரண்டு வழிகளை பார்க்கலாம்.

சரி ஏதாவது ஒரு MP3 பாடலை உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரில் திறந்து கீழிருக்கும் படத்தில் இருப்பது போல Media Library கிளிக் செய்து நீங்கள் போட்டோ இனைக்க விரும்பும் டிராக்கை தெரிவு செய்து இடது கிளிக் செய்வதன் மூலமாக திறக்கும் மெனுவில் Advanced Tag Editor செலக்ட் செய்யவும்.



இப்பொழுது கீழிருப்பது போல ஒரு பாப் அப் விண்டோ திற்க்கும் அதில் Picture டேப் திறந்து நீங்கள் விரும்பும் போட்டோவை பிரவுஸ் செய்து அப்ளை கொடுத்து ஓக்கே கொடுக்கவும்.



இது நான் உங்களுக்காக இனைத்திருக்கும் படம் வலது பக்கம் பாருங்கள் ஒரு போட்டோ இனைத்திருக்கிறேன்.



இரண்டாவதாக MP3
மென்பொருள் இருக்கிறது தேவைப்படுபவர்கள் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து அப்ளிகேஷனை ரன் செய்யவும் இதில் நீங்கள் போட்டோ இனைக்க விரும்பும் MP3 பாடல்களை ஏதாவது ஒரு போல்டரில் வைத்து கீழிருக்கும் படத்தில் குறிப்பிட்டு இருப்பது போல செய்து விடவும் அவ்வளவு தான் இனி உங்கள் MP3 பாடலை விண்டோஸ் மீடியா பிளேயரிலோ அல்லது www.videolan.org
இயக்கினால் கூடவே நீங்கள் இனைத்த போடோவையும் காணமுடியும்.



VLC பிளேயரில் நான் ஒரு MP3 பாடலை ஓட விட்ட போது நான் இனைத்திருக்கும் போட்டோவும் கூடவே தெரிகிறது.



நண்பர்கள் கவணத்திற்கு சில நேரங்களில் உங்கள் VLC Player ஒருவேளை போட்டோவை காண்பிக்காமல் இருக்கலாம் அதற்கான தீர்வு http://forum.videolan.org
அல்லது http://forums.mp3tag.de
இருக்கிறது முயற்சித்து பாருங்கள் வேறேதுனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் கேளுங்கள் எனக்கும் தெரிந்தால் நிச்சியம் பதில் அளிக்கிறேன்.

1 comment:

vikram singh said...


This is very good for us and very intersting
i have some special for related computer and internet
python mysql
python mysql connector
generics in csharp
namespace in csharp

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz