குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் அதனுடைய தரம் குறையாமல் அதே பார்மெட்டில் ஒரே கோப்பாக அனுப்ப வேண்டுமெனில் நாம் நாடுவது ZIP,RAR,7Z மற்றும் பல பைல் பார்மெட்கள் ஆகும். மொத்தத்தில் ZIP/RAR பைல்களை கணணி பயனாளர்கள் பயன்படுத்துவதே பைல் அளவை குறைப்பதற்க்கு தான்.
வேர்ட், பிடிஎப் போன்றவைகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்டுவது போல நமது ஜிப் பைல்களுக்கும் கடவுச்சொல் இட்டு பூட்டலாம்.
ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட: முதலில் எந்தெந்த பைல்களை எல்லாம் ஜிப் பைலாக உருவாக்க நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து ஒரே போல்டரில் அடைக்கவும். பின் போல்டரின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் பட்டியலில் winzip என்பதை தேர்வு செய்து Add to .zip என்பதை தேர்வு செய்து ஜிப் பைலை உருவாக்கி கொள்ளவும்.
இப்போது ஜிப் பைலானது உருவாகியிருக்கும். அடுத்ததாக winzip அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Encrypt என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும். அடுத்தாக zip என்னும் ஐகானை தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுடைய ஜிப் பைலை தேர்வு செய்யது Zip என்னும் பொத்தானை அழுத்தவும்.
Zip பொத்தானை அழுத்தியவுடன் கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான விண்டோ ஒப்பன் ஆகும். அதில் குறிப்பிட்ட Zip பைல்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல் உள்ளிடப்பட்ட Zip பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து ஒகே பொத்தானை அழுத்தவும்.
இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஜிப் பைல் கடவுச்சொல் இணைக்கப்பட்டு இருக்கும். நீங்கள் புதியதாக உருவாக்கிய பெயரில் இருக்கும்.
No comments:
Post a Comment