Saturday, 4 May 2013

மொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற

மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்றுவது எப்படி? என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன். படித்திருப்பீர்கள். தற்போது வீடியோ எடுக்கும் வசதி இன்றி வரும் மொபைல் போன்கள் குறைவு. உயர் தரத்தில் HD வீடியோ எடுக்கும் அளவுக்கு கூட மொபைல் போன்கள் சந்தைக்கு வந்து விட்டன.

சாதரணமாக மொபைலில் எடுக்கும் வீடியோக்களை கணினிக்கு மாற்றி பின்பு யூடியுபிற்கு மாற்று பழகி இருப்போம். இப்போது மொபைலில் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் மொபைலில் இருந்தே யூடியுபில் ஏற்றுவது எப்படி என்று பார்ப்போம். இதுவும் எளிதான ஒன்றுதான்.

இதற்கு தேவையானவை

1. யூடியுபில் ஒரு பயனர் கணக்கு
2. கேமரா வசதி உள்ள மொபைல் போன்
3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி

இந்த http://www.youtube.com/account சுட்டியை கிளிக் செய்து யூடியுபில் உங்கள் பயனர் கணக்கு பக்கத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே 'Mobile Setup' என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட ஈமெயில் முகவரியை அளிக்கும்.



அதை குறித்து வைத்து கொண்டு உங்கள் மொபைல் தொடர்புகளில்(Contacts) சேமித்து கொள்ளுங்கள்.

இனி மொபைலில் வீடியோக்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் வீடியோக்களை  பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால் ஈமெயில் மூலம் வீடியோவை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள் யூடியுபில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு வீடியோவை அனுப்பி விடுங்கள். உங்கள் வீடியோவில் அளவை பொறுத்து நேரம் பிடிக்கும்.

இப்போது நீங்கள் அனுப்பிய வீடியோ உங்கள் யூடியுப் கணக்கில் தானாக ஏற்றப்பட்டு இருக்கும். நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject பகுதியில் கொடுப்பது வீடியோவுக்கான தலைப்பாக வரும்.

இதன் மூலம் நீங்கள் செல்லுமிடமெல்லாம் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz