நெருப்பை போன்றது புற்றுநோய். உடலில் ஒரு பாகத்தில் ஆரம்பித்து அதன் கோடிக்கணக்கான விதைகள் ரத்தம் மூலம் மூளை, இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரலுக்கு சென்று தங்கி வளரும்.
ஆரம்பித்த பாகத்தில் ரேடியோ தெரபியோ அல்லது அறுவை சிகிச்சை செய்தாலும் நோய் குணமாவதில்லை. பெரும்பாலோருக்கு சில மாதங்களிலேயே அத்தியாவசிய பாகங்களுக்கு பரவி உயிரை பறித்து விடுகிறது.
இன்று பெரும்பாலான புற்றுநோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை சரியான கலவையில் நரம்பு வழியாக ரத்தத்தில் செலுத்தினால் சி.டி., எம் ஆர்.ஐ, பிஇடி ஸ்கேனுக்கு தெரியாமல் பரவியுள்ள புற்றுநோய் விதைகள் அழிவதுடன் முதலில் வந்த பெரிய கட்டியும் சுருங்கி சக்கை ஆகிவிடும்.
மேலும் தேவையெனில் சிறிய அறுவை சிகிச்சை அல்லது ரேடியோ தெரபியோ செய்யலாம். இத்தகைய நவீன மருந்து சிகிச்சையிலும் மார்பக புற்று, மூச்சுக்குழாய், உணவு குழாய், கர்ப்பப்பை, நாக்கு, ஆண் குறி, நுரையீரல், மலப்பை புற்று மற்றும் குழந்தைகள் புற்றுநோய்க்கு ஆபரேஷன் செய்யாமல் சிகிச்சை அளிக்கலாம்.
எய்ட்ஸ் நோயில் பிழைத்தவரில் பலருக்கு சில ஆண்டுகளில் புற்றுநோய் வருகிறது. புற்றுநோயாளிகள் சிலருக்கு எய்ட்ஸ் இருக்கிறது. சமீபத்திய நவீன சிகிச்சை முறைகளில் எய்ட்ஸ் + புற்றுநோய் நோயாளிகளுக்கும் நல்ல வைத்தியம் செய்யலாம் என்றார்.
மேலும் விவரங்களுக்கு 98840 57000/93806 57000/04442067705 என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment