படம் 1
படம் 2
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி உங்கள் இமெயில் முகவரி, நிறுவனத்தின் பெயர் மற்றும் எந்த நாடு என்பதை கொடுத்து Signup என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழைய வேண்டும், அடுத்து நமக்கு வந்திருக்கும் இமெயிலை சொடுக்கி நம் கணக்கை உறுதிப்படுத்த வேண்டும் அவ்வளவு தான். இனி நாம் எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு இன்வாய்ஸ் அனுப்ப வேண்டுமோ அந்த நிறுவனத்தின் பெயரை தட்டச்சு செய்ய வேண்டும்.ஏற்கனவே Trade Shift -ல் இணைந்து இருக்கும் நிறுவனத்தின் பெயர்
நாம் தட்டச்சு செய்ய தொடங்கியதுமே வர ஆரம்பிக்கும், இல்லை என்றாலும் நாம் இன்வாய்ஸ் தேதி மற்றும் பொருட்கள் எல்லாத்தகவல்களும் கொடுத்து Sent என்ற பொத்தானை சொடுக்கினால் அனுப்பியதற்கான ரசீதும் உங்களுக்கு ஒரு Copy-ம் செய்து இமெயில் மூலம் அனுப்பபட்டுவிடும், சில நேரங்களில் நிறுவனங்களுக்கு இன்வாய்ஸ் எப்படி அனுப்புவது என்று தெரியாமல் இருக்கும் அனைவருக்கும் இந்தத்தளம். பயனுள்ளதாக இருக்கும், வெளிநாடுகளில் இருக்கும் பல இலட்சம் நிறுவனங்கள்
இத்தளத்தில் இணைந்துள்ளன, இனியும் உங்கள் இன்வாய்ஸ் கிடைக்கவில்லை என்று எந்த நிறுவனமும் சொல்ல முடியாது, நம்முடைய நேரமும் மிச்சப்படும், கூடவே பல வருடங்களாக நாம் செய்த இன்வாய்ஸ் மொத்தமாக இணையத்தின் மூலம் எங்கு இருந்து கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment