Sunday, 21 April 2013

Desktop செல்லாமலேயே கணினியில் உள்ள Shortcut Icon களைக் கையாள (வீடியோ இணைப்பு)


கணினியை எளிதாக கையாள பல வழிகள் உள்ளன. நீங்கள் உங்கள் கணினியில் Install செய்த புரோகிராம்களின் Shortcut களை Desktop-ல் வைத்திருப்பீர்கள்.

ஒவ்வொரு முறையும் கணினியில் உள்ள புரோகிராம்களை தொடங்க Start menu சென்று All Programs மூலம் தொடங்குவீர்கள்.

அல்லது desktop சென்று அங்குள்ள Shortcut Icon கிளிக் செய்வதன் மூலம் தொடங்குவீர்கள்...

இனி அதுபோல் அல்லாமல் Desktop ற்கும் செல்லாமல் நீங்கள் விரும்புகிற புரோகிராமை இயக்க முடியும். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.

1. முதலில் உங்கள் டாஸ்க்பாரில்(Taskbar) ரைட்கிளிக் செய்யுங்கள்.
2. Properties Click செய்யவும்.
3. இப்போது Taskbar and Start Menu Properties விண்டோ திறக்கும்.
4. தோன்றும் அந்த விண்டோவில் Toolbars tab-ஐ கிளிக் செய்யுங்கள்.
5. Toolbars கிளிக்செய்தவுடன் தோன்றும் விண்டோவில்

Address
Links
Tablet PC Input Panel
Desktop

என்று இருக்கும். அதில் Desktop என்பதற்கு நேராக உள்ள செக்பாக்சில் டிக் மார்க்கை ஏற்படுத்துங்கள்.
Easy way to Use Desktop shortcuts

இறுதியாக Apply Ok கொடுத்து அந்த விண்டோவை மூடிவிடவும்.

இனி உங்கள் டாஸ்க்பாரில் உள்ள விண்டோஸ் நோட்டிஃபிகேஷன்(Windows Notification) ஏரியாவில் இவ்வாறு இருக்கும்.
Easy way to Use Desktop shortcuts
அதில் Desktop என்று இருக்கும் அம்புக்குறியில் கிளிக்செய்தால் நீங்கள் Desktop-ல் வைத்திருக்கும் அனைத்து புரோகிராம்களும் வரிசைப்படுத்திக் காட்டும்.

அந்த புரோகிராம்களின் மீது ஒரு முறை கிளிக் செய்தால் நீங்கள் விரும்பிய புரோகிராம் திறந்து கொள்ளும்.

இந்த வீடியோவிலும் Desktop செல்லாமலேயே கணினியில் உள்ள Shortcut Icon களைக் கையாள்வது எப்படி என்பதைக் காட்டியிருக்கிறேன். வீடியோவை கிளிக்செய்து பாருங்கள்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mVtN3Z0ua-Q
அதையே குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்த Desktop செல்லாமலேயே கணினியில் உள்ள Shortcut Icon களைக் கையாள என்னும் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.. நண்பர்களே.. மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz