Thursday, 18 April 2013
copy writing ஜாப் என்றால் என்ன?
காப்பி ரைட்டிங்க் ஜாப் என்று இணையத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதைப்போல் நானும் பல இடங்களில் காப்பி ரைட்டிங்க் ஜாப் availability பார்த்திருக்கிறேன். குறிப்பாக Freelancer , Mturk போன்ற தளங்களில் எப்பொழுதும் காப்பி ரைட்டிங்க் ஜாப் ப்ராஜக்ட் இருக்கும்.
காப்பி ரைட்டிங்க் ஜாப் என்றால் என்ன? அப்படின்னு நான் சில நேரம் யோசித்தது உண்டு. ஏனெனில் நமக்குத்தான் ஆங்கிலம் என்றாலே 7-ஆம் பொறுத்தம் ஆகிவிட்டது அல்லவா, ஆகையால் அந்த காப்பி ரைட்டிங்க் ஜாப் பற்றியும் ஒழுங்காகத் தெரியவில்லை. அதுவும், காப்பி ரைட்டிங்க் ஜாப்னு நம்ம ஊர்ல யாரும் செய்வதாக கேள்விப்படவும் இல்லை என்பதால் நானாகவே ஒர் அர்த்தம் புரிந்து கொண்டேன். அது தவறு என்பதனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், சுமார் 2007-ஆம் ஆண்டில் காப்பிரைட்டிங்க் ஜாப் செய்யும் தமிழர் ஒருவர், தனது பதிவாக Copy Writing job என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பதிலாக எழுதியதின் விளைவாக நான் அறிந்து கொள்ள முடிந்தது.
அந்த ஆர்ட்டிகளைப் படித்தப் பொழுது, காப்பி ரைட்டிங்க் ஜாப் என்பதற்கு நாம் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டோம் என்பதனை விட, அவர் ஒவ்வொருவருக்கும், காப்பி ரைட்டிங்க் ஜாப் என்றால் என்ன என்பதனை விளங்க வைப்பதற்குள் பட்ட பாடினைச் சொல்லும் பொழுது ஒர் பெரிய மகிழ்வு. என்னும் விரிவாகச் சொல்லப் போனால், சென்னைக்காரங்க 2 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் பொழுது, அவங்களுக்கு எல்லாம் 6 மணி நேரம் கரண்ட் கட் பண்றங்க, நமக்கு பரவாயில்லை என்று மகிழ்வதும், 6 மணி நேர கரண்ட் கட் காரங்க, அங்கப் பாரு 12 மணி நேரம் பவர் கட்டாம் என கொஞ்சம் ஆறுதல் அடைவதும், இப்படி ஒருவர்க்கு ஒருவர் ஆறுதல் அடைவது போல, நானும் ஆறுதல் அடைந்து கொண்டேன்.
சரி, நம்மை விடுங்க. நாம ஏதோ அரசு பள்ளியில் குப்பைத் கொட்டி வந்தவர்கள். இன்று ஆங்கில வழிப் பள்ளியில் படிக்கிறேன் என்று சொல்லுகின்ற மாணவர்களுக்கு தினமும் காப்பி ரைட்டிங்க் கொடிக்கிறாங்களாம். அதையும் எனது அண்ணன் பையன் நேற்று சொல்லும் பொழுது தெரிந்து கொண்டேன். உடனே, அதென்னடா copy writing என்று கேட்டேன். அதுவா, புக்ல இருக்குல அத அப்படியே பார்த்து எழுதணும்னு சொன்னான். ஒ.. இதனால் தான், அந்த காப்பிரைட்டரை ஜெராக்ஸ் மிசின்னு சொன்னாங்களா!! சரி சரி. அப்படின்னு மனுசுல நினைத்துக் கொண்டேன். ஆனால், நான் என்ன அர்த்தம் கொண்டேன் தெரியுமா! அது தெரியாமலே இருக்கட்டும்.
இப்பொழுது, உண்மையான CopyWriting ஜாப் பற்றிச் சொல்கிறேன். அதாவது, விளம்பர எழுத்தாளர்களைத்தான் காப்பிரைட்டர் என்று அழைக்கிறார்கள். அதுவும் பொருளுக்குத் தகுந்த ஓவியத்தினை/விளம்பரப் படத்தினைக் கொண்டு சுருக்கமான வாசகம் மற்றும் மனதில் தங்கும் சுலோகம் ஆகியவற்றை உருவாக்குவது/ எழுதுவதுதான் Copy Writer பணி. என்ன நான் சரியா சொல்லவில்லை என்று பார்க்கிறீர்களா? சரி, நீங்களே அந்த தன்னம்பிக்கையாளரின் விளம்பர உலக வலைப்பூவில் எழுதியுள்ளதில் சரியாக படித்துக் கொள்ளுங்கள் > http://thannambikkai.org/2002/08/01/2187/
இப்பொழுது, விளம்பரம் செய்வது என்பதனைப் பற்றிக் உங்களுக்கு கொஞ்சம் நல்லாவே தெரிந்திருக்கும் அல்லவா! அதனை வெளிப்படுத்தும் விதமாக ஏதேனும் ஒர் பொருளுக்கு விளம்பர வாசகங்கள் எழுதி பின்னூட்டம் கொடுங்கள் மார்க்ப் போட ஆளு அனுப்பி வைக்கிறேன்.
Labels:
வேலைவாய்ப்பு
No comments:
Post a Comment