Sunday, 21 April 2013

உங்கள் மொபைலுக்கு வரும் தேவையில்லாத விளம்பர அழைப்புகளை தடுப்பது எப்படி?

How to prevent unwanted marketing calls from your mobile?
நீங்கள் எந்த நிறுவனத்தின் மொபைல் சேவையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அடிக்கடி விளம்பர அழைப்புகள் வந்து தொல்லைக்கொடுக்கிறதா? அவ்வாறு தொல்லை கொடுக்கும் விளம்பர அழைப்புகள், விளம்பர SMS களை தடை செய்வது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

ஏதாவது முக்கிய வேலையாக இருப்போம். அப்போதுதான் இந்த அழைப்பு வந்திருக்கும். எடுத்து அழைப்பைக் கேட்கும்போதுதான் அது விளம்பர அழைப்பு என்பது தெரியவரும்.

இந்த நேரங்களில் நமக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே இருக்காது. இதைப்போன்றே வர்த்தக குறுஞ்செய்திகளும்(SMS).

முக்கியமான நேரங்களில் தேவையில்லாமல் இதுபோன்ற வர்த்த அழைப்புகளுத், வர்த்தக எஸ்.எம்.எஸ் களும் வந்து நமது கழுத்தை அறுக்கும்.

இதுபோன்ற வியாபார ரீதியான வர்த்தக அழைப்புகளையும், வர்த்தக SMS களையும் நிறுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

வோடோபோன் (Vodafone), ஏர்டெல்(Airtel) வாடிக்கையாளர்கள் START DND என தட்டச்சிட்டு 1909 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் விளம்பர அழைப்புகள் தடைசெய்யப்படும்.

மற்றுமொரு வழி இந்த நிறுவனத்திற்குரிய வலைத்தளத்தில் Do not Disturb என்ற பக்கதிற்கு சென்று தேவையற்ற விளம்பர அழைப்புகள், தேவையற்ற விளம்பர SMS களை நிறுத்த முடியும்.

PBL MObile வைத்திருப்பவர்கள் Donot Call signup page சென்று அங்குள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இந்த தேவையில்லாத அழைப்புகளை நிறுத்த முடியும்.

நீங்கள் BSNL வாடிக்கையாளர் எனில் இதுபோன்று அத்தளத்தில் donot call என்ற பகுதியில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.

நீங்கள் IDEA Cellular பயன்படுத்தும் Post Paid வாடிக்கையாளர்கள் எனில் இந்த கால்கள் தேவையில்லை என Register செய்ய வேண்டும்.

Prepaid வாடிக்கையாளர் எனில் உங்களுடைய எண்ணை பதிவு செய்து தேவையில்லாத அழைப்புகளை நிறுத்த விண்ணப்பிக்க வேண்டும்.

நீங்கள் எந்த ஒரு நிறுவனத்தின் செல்போன் சேவையை நீங்கள் பயன்படுத்தினாலும், அந்த நிறுவனத்திற்குரிய வலைத்தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமில்லாத சேவைகளை தடை செய்வதற்குரிய வழிமுறைகளைப் பெற்று, விண்ணப்பித்து தடை செய்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz