அதோ பார்.. நிலா!
நிலாவுக்குள் ஊஞ்சலாடுவது பாட்டி!
பாக்கு கடிச்சி வெற்றிலை சுவைப்பது தாத்தா!
தாயம் விளையாடுவது அக்கா!
அறுந்து ஓடுவது... நம்ம குட்டிப் பாப்பா!!!!
அப்படியெல்லாம்
சொல்லிக்கூட நம்ம ஊர்க்காரங்ககிட்ட நல்ல பெயர் வாங்கிடலாம். ஆனால்,
ஆன்லைன் ஜாப் என்று சொல்லி மட்டும் வாயே திறந்திடக்கூடாது. ஏன்னா...
அம்மாம் பெரிய கெட்ட.... ச்சி... அப்படிச் சொல்வார்களா? அந்த அளவுக்கு
அதில் தில்லு முல்லு நடக்குதுன்னு ஊருக்கே தெரியுது. ஆனாலும், அடங்க
மாட்டாங்க நம்ம மக்கள். அதான் செந்தில் சொல்வாரே! ஊர்க்கு எல்லையில்
இருக்கும் மலையைத் தூக்கப் போறேன்னதும்... அடிச்சிப் புரண்டு ஓடிப்
பார்க்கப் போற மக்கள் ... வாங்க வாங்க.. தூக்கி தோள்ல வைங்க என்றதும்!!!!
எத்தனை ஆவேசப்படுவார்கள்! அதைப்போல் தான் ஆகிவிட்டது ஆன்லைன் ஜாப்
என்பதனையும் மறுக்க முடியுமா!
10 ஆயிரம் கொடுத்தால் மாதம் 1000
வீதம் 60 மாதத்திற்கு கொடுப்பது மட்டும் அல்லாமல் கடைசி மாதத்தில்
கொடுத்தத் தொகையான ரூ.10 ஆயிரத்தையும் திரும்பக் கொடுத்திடுவோம்னு
சொல்கிறார்கள்.. ஒர் சில ஆன்லைன் ஜாப் தளங்கள். சரி, கொடுங்க... கொடுத்தால்
நல்லதுதான். யார் தான் வேண்டாம் என்பார்? நீங்கள் சொல்வீர்களா? ஏன்,
படுகை.காம் கூட மாதம் ரூபாய் 35,000க்கும் மேல் சம்பாதிக்கலாம் இலட்சம் கூட
சம்பாதிக்கலாம் என்று கூறுகிறது. ஆனால், ஒர் போதும் மாதம் ரூபாய் 1000
கண்டிப்பாக கொடுப்போம் என்று மட்டும் சொல்வதே இல்லை, ஏன்? அதே நேரத்தில்
அவங்களைப் போல் முதலில் ரூ.1000 த்தினைப் பெற்றுக் கொள்கிறது, பின் அந்த
ஆயிரத்தினைப் பெறுவதுக்கே தகிடுத் தக்கா போட வேண்டியிருக்கு எல்லாம் ஏன்?
ஆக
எல்லா ஆன்லைன் ஜாப் என்பதும் பொய்தான் ஆன்லைன் ஜாப் என்றாலே ஏமாற்றும்
வேலைதான் என்ற வார்த்தைகளை அள்ளிவிட ஆரம்பிக்கும் பொழுதே நம்மைக் கொஞ்சம்
கேள்விக் கேட்டுக் கொண்டால், திரும்பவும் சொல்லமாட்டோம். அந்த ஏன் என்ற
கேள்வியை உங்களின் முதன்மைத் தேடலின் வார்த்தையில் வைத்திருந்தால் இத்தனைப்
பிரச்சனைகள் வராது. அதாவது நாம் தேடி வந்தது ஆன்லைன் ஜாப், அதாவது வேலை.
அப்படி நாம் என்ன பெரிய வேலை செய்து கிழித்துவிட்டோம்? பணத்தினைப் பார்க்க?
ஆக வேலை செய்தால் கண்டிப்பாக பணம் கிடைக்கும். நம் உழைப்பு என்றும் வீண்
போகாது, என்பது எல்லோர்க்கும் தெரிந்தது தானே! ஆனால் நானும் வேலை
செய்கிறேன் என்று பம்மாத்துக் காட்டினால் வேலைதான் பறிபோகும் என்பதும்
உங்களுக்குத் தெரிந்தது தானே!!!
அப்படித்தான் பம்மாத்து வேலைகளைக்
காட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் மாட்டிக் கொண்ட மக்களின் மனக்
குமறல்களைக் கேட்டு கேட்டு.. ஊர்ல உள்ளவங்க எல்லாம் ஆன்லைன் ஜாப் என்று
கேட்டாலே தலைதெரிக்க ஓடுகிறார்கள்,,, ஓடும் அளவிற்கு செய்துவிட்டார்கள்...
சில புண்ணியவான்கள். பின்னே! பூலோகத்திலேயே ரம்பை ஊர்வசிகளெல்லாம்
இருக்கும் பொழுது, சொர்க்கலோகத்தை நினைப்பானேன்? ஆனாலும் உண்மையை எவராலும்
அழித்திட முடியாது, மறைக்கத்தான் முடியும். ஆன்லைன் ஜாப் என்பது மெய் தான்.
ஆனால் பணியே செய்யாமல் பணம் கிடைக்காதா என காத்து இருப்பதுதான் கொஞ்சம்
நெருடலான ஒன்று.
கொஞ்சம் ஒர் படி மேல்
போனால்.... வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் மாதம் ரூ.30,000/-
சம்பாதிக்கலாம் என்றால் படிச்சிட்டு வேலைக்குப் போறவன் எல்லாம் முட்டாளா?
அப்படின்னெல்லாம் கேள்வி கேட்கிறாங்க. படிச்சிட்டு வேலைக்கும் போறவன் உங்க
கூற்றுப்படி முட்டாளோ இல்லையோ! அதை அவங்க உங்களிடம் கேட்டுத் தெரிந்து
கொள்ளட்டும்... அதானே நமக்கு எதுக்கு ஊர் வம்பு. ஆனால்,
வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் மாதம் ரூ.30,000/- சம்பாதித்துக்
காட்டிவிட்டால்!!!
சத்தியமாக சொல்கிறேன் ஆன்லைன் ஜாப் என்பது
உண்மை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லைவே இல்லை. ஆனால், பணம்
சம்பாதிக்க நாம் எத்தனை உண்மையாக உழைத்தோம் என்பதுதான் உங்களின்
மெய்த்தன்மையை ஆராய்ந்து வருவாய் கொடுக்கும். ஆகையால் உண்மையாக
மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு தங்களது பணிகளைச் செய்யுங்கள். சோம்பேறியாக
இருந்தாலும்... சோம்பலை உற்சாகமூட்டும் பணிகளையாவது செய்யுங்கள்.
No comments:
Post a Comment