இப்பதிவில் வீடியோ கான்ப்ரன்சிங் என்றால் என்ன? இதன் பயன் என்ன? என்பதைப் பற்றி சுருக்கமாக பார்க்க இருக்கிறோம்.
உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நபர்கள் தங்களுக்கிடையே நேருக்கு நேர்
பேசுவது போன்ற ஒரு வசதியை வழங்குவது தான் வீடியோகான்ஃபிரன்ஸிங்(video
conferencing).
இதற்கு வேறொரு பெயரும் உண்டு. அது Teleconferencing (டெலிகான்ஃபிரன்ஸிங்).
இந்த வீடியோகான்ஃபிரன்சிங் எப்படி இருக்கும்?
நாம் அடிக்கடி செய்தித் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். செய்தி
வாசிப்பவர் வேறொரு இடத்திலிருக்கும் செய்தி சேகரிப்பாளரிடமிருந்து
பேசுவதையும், அந்தச் செய்தி சேகரிப்பாளர் அங்கிருந்தபடியே
பார்வையாளர்களாகிய நமக்குச் செய்திகளை வழங்குவதையும் பார்த்திருக்கிறோம்
அல்லவா? இது போன்ற நிகழ்வுகளுக்கு வீடியோகான்ஃபிரன்ஸிங்() என்று பெயர்.
இந்த வீடியோ கான்ஃப்ரன்சிங் முறையால் உலகம் உள்ளைங்கையில் சுருங்கிவிட்டது.
வீடியோகான்பரன்சிங்(வீடியோ பரிமாற்றம் எவ்வாறு நடக்கிறது? )
அனுப்புபவரிடம் உள்ள கேமரா(camera) படத்தை எடுக்கிறது. இந்தப் படம்
குறுக்கப்பட்ட இலக்க வகையாக() மாற்றப்படுகிறது. இவ்வாறு மாற்றப்பட்ட வீடியோ
மோடத்தின் வழியாக மறுமுனைக்கு அனுப்பப்படுகிறது. மறுமுனையில் இலக்க வகை
மீண்டும் படமாக மாற்றப்பட்டு கணிப்பொறி திரையில் காட்டப்படுகிறது.
Cu-SeeMee என்பது வீடியோகான்ஃபிரன்சிங்கில் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற
மென்பொருளாகும்.
இம்மென்பொருள் முழு விரிவாக்கம் See You See Mee என்பதாகும்.
வீடியோ கான்பரன்சிங்கில் மூன்று வகைகள் உள்ளன.
1. Computer-based system (கணினி அடிப்படையானது)
2. Desktop system(மேசைக் கணினியின் மூலம் வீடியோ கான்ஃப்ரன்சிங்)
3. Studio-based system(ஸ்டூடியோ அடிப்படையானது)
இவ்வசதியின் மூலம்...
அரசியல்வாதிகள் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்தில் நடக்கும் விழாவிற்கு
நேரடியாகவே செல்லாமல் வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் திட்டப்பணிகளை
தொடங்கிவைப்பது.
மருத்துவர்கள்(Doctors) வெளிநாடுகளுக்குச் செல்லாமாலேயே அங்கிருக்கும்
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, அறுவை சிகிச்சை செய்யக் குறிப்புகள்
கொடுப்பது போன்றவை இதன்மூலம் சாத்தியமாகியது.
அது போல நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீடியோசாட்டிங்(Video chat) கூட இந்த வகையில் அமைந்த ஒன்றுதான்.
No comments:
Post a Comment