நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணத்தினால்
நாம் உபயோகிக்கும் செல்போன், லேப்-டாப், ஆன்லைன் வணிகம், வங்கிக் கணக்குகள்
என ஒவ்வொன்றிற்கும் ஒரு
பாஸ்வேர்டு உபயோகிக்கிறோம். சில நேரங்களில்
அவற்றை மறந்து விடுவதால் திண்டாட நேரிடுகிறது. மேலும், அவற்றைத்
திருட்டுத்தனமாக இயக்கி மோசடியில் ஈடுபட முடிகிறது.
இவற்றை தவிர்க்க ரேகைப் பதிவு, குரல் பதிவு மற்றும் முக அடையாளம்
போன்றவை பல்வேறு துறைகளில் ரகசிய குறயீடுகளாக பயன்படுத்தப்படுகிறது.
இதுபோல் செல்போனிலும் மாற்றம் தேவை என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம், தனது அடுத்த ஐ-போன் வெளியீட்டில் கைரேகையை ரகசிய
குறயீடாக பதிவு செய்து செல்போனை இயக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த
இருக்கிறது. இதுபோன்ற முறைகள் இ- மெயில், வங்கிக் கணக்குகள் போன்றவற்றிலும்
பயன்படுத்தலாம்.
கூகுள் நிறுவனம் வாய்ஸ் போன், ஐரிஸ் ஸ்கான்னர்ஸ், பயோ மெட்ரிக்
முறைகள், இதயத் துடிப்பின் அளவு போன்றவற்றைக் கூட ஆய்வு செய்து வருகிறது.
இந்த முறையை நிரந்தரமாக பயன்படுத்துவது பற்றிய மாற்று வழிகளைக்
செல்போன் நிறுவனங்கள் யோசித்து வருகின்றன. ஆப்பிள் நிறுவனம், ரேகைப்பதிவு
மற்றும் குரல் பதிவு கொண்ட போன்களை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்புகள்
ஏற்பட்டுள்ளன.
இதற்கேற்ப, ஆப்பிள் நிறுவனம் போலி கைரேகைகளைக் கண்டுபிடிக்கும்
சாப்ட்வேர் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது. மேலும் பயோமெட்ரிக்
சென்சார்களின் உரிமத்திற்கும் விண்ணப்பித்துள்ளது.
No comments:
Post a Comment