Sunday, 14 April 2013

உங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க 40 சிறந்த வழிகள்

உங்கள் பிளாக்கின் வாசகர்களை
பிளாக் வைத்திருக்கும் அனைவரும் யோசிப்பது ஒன்று தான் நம் பதிவு பிரபல மாக வேண்டும். அதன் மூலம் நம் பிளாக் பிரபலமடைய வேண்டும். எப்படி நம் பிளாக் பதிவை பிரபலமடைய வைப்பது அது நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை

பொறுத்தே அமைகிறது.
வாசகர்கள் மூலம் மட்டுமே நம் பதிவு பிரபலமடைகிறது. ஆகவே நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கீழே 40 சிறந்த வழிகளை கீழே தொகுத்துள்ளேன். நானும் இந்த வழிகளை தான் கடைபிடித்து கொண்டிருக்கிறேன்.
1.சிறந்த பதிவுகளை வெளியிடவும்.
2. மற்ற தளத்திற்கு சென்று பின்னூட்டம் இடுங்கள்.
3.உங்கள் Sitemap தேடியந்திரங்களில் இணைக்கவும்.
4.உங்கள் தளத்தை வேகமாக ஓபன் ஆகும் படி வைத்து கொள்ளுங்கள்.
5.உங்கள் வலைபதிவை தேடியந்திரங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றுங்கள்.
6. உங்கள் பயண நேரங்களை வீணாக்க வேண்டாம்.
7.அதிலும் ஏதாவது பதிவை பற்றி யோசித்தல் நல்லது.
8.உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிய படுத்தவும்.
9.ஆபாச பதிவுகளை தவிர்க்கவும்.
10.உங்களுடைய புதிய இடுகைகளில் பழைய இடுகைகளின் லிங்க் கொடுக்கவும்.
11.உங்களுடைய தளத்தில் Friends Bloglist சேருங்கள்.
12.உங்களுடைய பழைய பதிவுகளின் லிங்க் முகப்பு பக்கத்தில் தெரிவியுங்கள்.
13.ஒரே இரவில் உங்கள் தளம் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணங்களை விட்டு விடுங்கள்.
14.நேரம் தவறாமல் பதிவு போடவும்.
15.Popular Post விட்ஜெட் சேருங்கள்.
16. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் சேருங்கள்.
17. உங்களுடைய பதிவில் சிறந்த பத்து பதிவுகளை தேர்ந்தெடுத்து பதிவாக போடுங்கள்.
18.உங்களுடைய பக்கம் லோட் ஆகும் நேரத்தை குறைக்கவும்.
19.வாசகர்கள் ரசிக்கும் படி எழுதுவது சிறந்தது. உங்களுடைய தளத்தில் Subscribe விட்ஜெட் சேருங்கள்.
20.உங்கள் நண்பரின் மெயிலுக்கு உங்கள் பதிவின் சிறு முன்னோட்டத்தை தெரிவியுங்கள்.
21.உங்களுடைய இமெயிலில் உங்கள் பிளாக்கின் முகவரியை கையெழுத்தாக பயன்படுத்துங்கள்.
22.உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Google Adwords
23.உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Facebook Add
24.follower விட்ஜெட் பொறுத்த மறக்காதீர்.
25.Archive விட்ஜெட் பொருத்துங்கள்.
26.Alexa Traffic விட்ஜெட் பொருத்தவும்.
27.Related Post விட்ஜெட் பொறுத்த தவற வேண்டாம்.
28.Yahoo Answer போன்ற தளங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை இட்டு உங்கள் பிளாக்கின் முகவரியை தெரிவிக்கவும்.
29.உங்கள் பிளாக்கை சிம்பிளாக வைத்து கொள்ளுங்கள்.
30. உங்கள் தளத்திற்கு பயனுள்ள விட்ஜெட் மட்டும் சேருங்கள்.
31.ட்விட்டரில் உங்கள் பதிவுகளை இணையுங்கள்.
32.பேஸ்புக்கில் உங்கள் பதிவுகளை இணைக்கவும்.
33.கூகுள் பஸ்ஸில் பதிவுகளை இணைக்க தவறவேண்டாம்.
34.உங்கள் பக்கத்தில் Twitter,Facebook- போன்ற தளங்களுக்கு இணைப்பு கொடுக்க மறக்க வேண்டாம்.
35.உங்கள் தளத்திருக்கு ஏற்ற கீவேர்ட் தேர்வு செய்யுங்கள்.
36.Alexa Tool bar கண்டிப்பாக உபயோகிக்கவும்.
37.உங்கள் முகப்பு பக்கத்தை அழகுள்ளதாக வைத்து கொள்ளுங்கள்.
38.பிளாக்கரில் உள்ள முக்கியமான சேவைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.
39 தேவையில்லாத விட்ஜெட்டுக்களை பொறுத்த வேண்டாம்.
40.தினமும் உங்கள் மெயில் சோதித்து வாசகர்கள் ஏதேனும் மெயில் அனுப்பி இருந்தால் அதற்கு பதில் போடவும்.
இந்த வழிகளை கடைபிடித்தால் கூடிய விரைவில் நீங்கள் சிறந்த பதிவராக வலம் வரலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz