Monday, 11 March 2013

பிளாக்கர் டிப்ஸ் (Blogger tips) தமிழ்10, இன்ட்லி, யுடான்ஸ்தமிழ்வெளி, தமிழ்மணம்,திரட்டிகள்(blog aggregator)

http://www.usilampatti-chellappa.blogspot.in.com/2012/06/blogger-tips.html
(இந்தப் பதிவு முற்றிலும் புதியவர்களுக்கானது..)

பிளாக்கரில் ஒரு சில தொழில்நுட்பத்தைக் கையாண்டால், விரைவில் உங்கள் வலைப்பதிவு பிரபலமடையும். இதற்கு ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

blogger tipsதிரட்டிகள்(blog aggregator): உங்கள் வலைப்பூவை பிரபலமடையச் செய்வதற்கு இந்த திரட்டிகள் பெரிதும் துணைபுரிகின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரட்டிகள் இன்று இணையத்தில் இருக்கின்றன. இதில் நீங்கள், உங்களுக்கான கணக்கை உருவாக்கிக்கொண்டு, பிறகு அதில் உங்கள் பதிவுகளுக்கான இணைப்பை கொடுத்து, பதிவதன் மூலம் உங்களது இடுகையானது திரட்டியால் திரட்டப்படும்.
ஒரு சில திரட்டிகள் தானியங்கியாகச் செயல்பட்டு உங்களுடைய பதிவுகளை சேகரிக்கும். உம். தமிழ்வெளி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளைச் சொல்ல்லாம். இவற்றிற்கான இணைப்புப் பட்டையை உங்கள் தளத்தில் இணைத்திருந்தால் போதுமானது.

ஒவ்வொரு புது இடுகையும் உங்கள் தளத்தில் வெளியிட்ட பிறகு... உங்கள் தளத்தில் இணைத்திருக்கும் திரட்டிகளுக்கான இணைப்பு படத்தைச் சொடுக்கும்போது உங்கள் தளத்தில் புதியாக வெளியிடப்பட்ட பதிவுகள் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் தானாகவே திரட்டப்படும். தமிழ்வெளித் திரட்டியிலும் இப்படி தானியங்கியாக பதிவுகள் சேகரிப்படுகிறது. பல தளங்களில் இவ்வாறு இல்லாமல் நாமாகவே பதிவின் இணைப்பைக் கொடுத்து திரட்டியில் சேமிக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

உம் தமிழ்10, இன்ட்லி, யுடான்ஸ்போன்ற திரட்டிகளைச் சொல்லலாம். இவ்வாறு நீங்கள் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை பதியும்போது, திரட்டிக்கு வரும் நண்பர்கள் உங்கள் பதிவுகளின் தலைப்பால் ஈர்க்கப்பட்டால், உடனே அதைச் சொடுக்கி உங்கள் பதிவுகளை பார்வையிடுவார்கள். அவர்களுக்குப் பிடித்தமான பதிவுகளாக இருப்பின், பதிவைப் பற்றிய கருத்துகளை கூறுவார்கள். இதுபோல அறிமுகமில்லா நண்பர்களும் நம் தளத்திற்கு வருகைதர இவ்விதமான திரட்டிகள் உதவுகின்றன.

திரட்டிகளைப் பற்றி என்னுடைய முந்தையப் பதிவு... உங்கள் பிளாக்கரைப் பிரபலப்படுத்த முப்பதுக்கும் மேற்பட்ட திரட்டிகள் ஒரே இடத்தில் ...!!

உங்கள் பிளாக்கை திரட்டியில் இணைக்க முடியவில்லையா? 

நீங்கள் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்கும்போது பிழைச்செய்தி வருகிறதா? இதற்கான ஒரு எளிய தீர்வு இது.. முதலில் உங்களுடைய பீட்பர்னர் கணக்கில் உள் நுழைந்துகொள்ளுங்கள்..!
பிறகு My Feed என்பதைக் கிளிக் செய்யுங்கள். அடுத்து edit the feed details என்பதைக் கிளிக் செய்து பார்த்தால் அதில் உள்ள http://myblogname.blogspot.com/atom.xml அல்லது http://myblogname.blogspot.com/feeds/posts/default என இருக்கும். அதை நீக்கிவிட்டு பின்வரும் நிரல் வரிகளை காப்பி செய்து அந்தப் பெட்டியில் பேஸ்ட் செய்து சேமித்துவிடுங்கள்.

http://myblogname.blogspot.com/feeds/posts/default?max-results=3


சிவப்பு நிறத்தில் உள்ளதிற்கு பதில் உங்களுடைய வலைப்பூவின் முகவரியை மாற்றிவிடுங்கள்.

இனி நீங்கள் திரட்டிகளில் பதிவை இணைக்கும்போது சரியாக உங்கள் பதிவுகள் இணைந்துவிடும்.

அதில் தானியங்கியாக உள்ள Feed URL ஐ எடுத்துவிட்டு, கீழிருப்பதைப் போன்ற இணைப்பு நிரலை வைத்துவிடுங்கள். இதனால் உங்கள் வலைப்பூவை திரட்டிகளில் இணைப்பது எளிதாகும். நமது தங்கம்பழனி வலைப்பூவில் இத்தகைய பிரச்னையை எதிர்கொண்ட போது நண்பர் பிரபுகிருஷ்ண அவர்கள் உதவினார். அதையே இங்கும் குறிப்பிட்டிருக்கிறேன்.

பிளாக்கரில் ஓட்டுப்பட்டைகளின் பங்கு(Vote Button):

இவ்வாறு நமது பதிவுகளைத் திரட்டும் திரட்டிகளானது அத்தளத்திற்குரிய ஓட்டுப்பட்டைகளையும் வழங்குகிறது. இந்த ஓட்டுப்பட்டைகளை உங்கள் வலைப்பூவில் நிறுவதன் மூலம், தளத்திற்கு வரும் வாசகர்கள் உங்கள் பதிவுகளுக்கான வாக்கை செலுத்த முடியும். இதுபோல அதிக ஓட்டுகளைப் பெற்ற பதிவுகளை வலைத்திரட்டிகள், தானாகவே தங்களுடைய தளத்தின் முதன்மைப் பக்கத்திற்கு கொண்டுவந்துவிடும். இதனால் திரட்டிகளில் பதிவுகளைப் பார்வையிடுபவர்களுக்கு உங்கள் பதிவுகள் முதன்மையாக தெரியும். இதனால் பல வாசகர்களுக்கு உங்கள் பதிவான கொண்டுசெல்லப்படுகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான பக்கபார்வைகளைப்(Page Views) நீங்கள் பெறமுடியும். அதிக பேஜ்வியூஸ் பெறுவதன் மூலம் உங்கள் தளம் தரமிக்க தளமாக மேம்படும்.

தள வடிவமைப்பு(Website or blog Design): தளவடிவமைப்பு என்பது மிக மிக முக்கியமானது. உங்கள் வலைப்பூவிற்கான வடிவமைப்பை சற்று மாற்றுவதன் மூலம் ஒரு நல்ல கட்டமைப்பைப் பெற முடியும். இதற்கு மூன்றாம் நபர்கள் வடிவமைத்த பிளாக்கர் டெம்ப்ளேட்கள்(Blogger Templates) உதவும். கீழ்க்கண்ட இணைப்பில் சென்று பார்த்தால் உங்களுக்குப் பிடித்தமான தரமான வலைப்பூ வார்ப்புருக்கள் கிடைக்கும். தேவையானதை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

1.Free Blogger Templates
2.Blog crowds
3.Webtalks
4.Final Sense
5. B Template

இந்த தளங்களில் தேடினாலே உங்களுக்கு வேண்டிய வலைப்பூவின் வார்ப்புருக்கள் கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz