Thursday, 28 March 2013

வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தையின் பேச்சுதிறன் பாதிப்படையும்


வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தையின் பேச்சுதிறன்
பாதிப்படையும்
கர்ப்பிணிகளின் வைட்டமின் டி
குறைபாடு குழந்தைகளின் பேச்சு திறனை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் ஆன்ட்ரூ ஒயிட் ஹவுஸ் தலைமையில், டெலிதான் குழந்தைகள் நல
ஆராய்ச்சி மையம் கர்ப்பிணிகளையும், வயிற்றில் குழந்தைகளின் வளர்ச்சி குறித்தும்
விரிவான ஆய்வு நடத்தி வருகிறது.
கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாடு இருந்த சுமார் 740 தாய்மார்களின்
குழந்தைகளை தொடர்ந்து 17 ஆண்டுகள் இந்த மையம் கண்காணித்தது. அவர்கள் பின்னாளில்
வளர்ந்து வரும் போது பேச்சு திறன் குறைவுடையவர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கர்ப்பத்தில் உள்ள சிசு தாயிடம் இருந்துதான் அனைத்து விதமான சத்துகளையும்
பெறுகிறது. எனவே குழந்தைகளின் எதிர்கால நலனை கருதி கர்ப்பிணிகள் உடல்
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பேச்சு திறன் பாதித்த குழந்தைகள் குறித்த ஆய்வில் கர்ப்ப காலத்தில் தாயின்
வைட்டமின் டி குறைபாடும் முக்கிய காரணமாக இருந்தது தெரியவந்தது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கு வைட்டமின் டி
சத்து மிக அவசியம். எனவே உரிய பரிசோதனைகள் மூலம் கர்ப்பிணிகள் வைட்டமின் டி அளவை
அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆன்ட்ரூ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz