நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உணவு வகைகள்
இன்று
உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று.
எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய்
இந்த சர்க்கரை நோயே.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
அதிகம் பசி உண்டாகும். நாவறட்சி அடிக்கடி ஏற்படும். உடல் சோர்வாகவே இருக்கும்.
அடிக்கடி சிறுநீர் பிரியும். கை, கால் மரத்துப் போகும்.
சில நேரங்களில் தடித்துப் போகும். கண் பார்வை மங்கல் உண்டாகும். பாதங்கள்
உணர்வற்ற தன்மை உண்டாகும். திடீரென உடல் எடை குறைதல், கூடுதல் போன்றவை
உண்டாகும்.
அதிக கோபம், மன எரிச்சல், மன உளைச்சல் ஏற்படும். உடலில் சிறு காயங்கள்
ஏற்பட்டால் அது வெகு நாட்களுக்கு ஆறாமல் இருக்கும்.
இந்த அறிகுறிகள் இருப்பின் உடனே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக்
கொள்வது நல்லது.
உணவுக் கட்டுப்பாடு
நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால் தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத
வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது. உணவின் தன்மையறிந்து,
வகையறிந்து அளவோடு உண்ண, உணவே அற்புத மருந்தாய் வேலை செய்யும்.
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய சில காய்கறிகள்
வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப்பிஞ்சு, வெண்டைக்காய்,
முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம்
பிஞ்சு, அவரைப் பிஞ்சு.
இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.
இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.
பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை,
வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை. நீரிழிவு
நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும்.
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாகவும் செய்து அருந்தலாம்.
காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு,
சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு
கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்தலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை
சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெல்லம்,
உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள்.
கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம்.
உடற்பயிற்சி
சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தாலே நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
ஆரம்பத்தில் 20 நிமிடம் நடந்தால் போதும். பின்னாளில் நேரத்தை சற்று அதிகப்படுத்திக்
கொள்ளலாம்.
No comments:
Post a Comment