Sunday, 10 March 2013

ஒரே கிளிக்கில் உங்கள் வலைத்தளத்தை 140 சர்ச் என்ஜின்களில் இணைக்க

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/09/submit-your-blog-in-140-search-engines.html

submit your blog in 140 search engines at one click

வணக்கம் நண்பர்களே...!

submit your blog in 140 search engines
நீங்கள் பிளாக்கர் பிளாக்(blogger blog) அல்லது வலைத்தளங்கள் (websites) வைத்திருக்கிறீர்களா?

உங்கள் வலைத்தளத்திற்கான வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா?

உங்கள் வலைத்தளங்கள் மிகவும் பிரபலமாக வேண்டுமா?

அப்படியெனில் அதற்கு நீங்கள் Search Engine Optimize செய்ய வேண்டும். ஒரே கிளிக் 140 Search engineகளில் உங்கள் தளத்தில் இணைப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். அதற்கு முன்...

Search Engine Optimize என்றால் என்ன?

தேடுஇயந்திரத்தில் ஒரு பயனர் தேடும்போது, அந்த தேடலுக்கு உரிய சொல்லானது உங்கள் தளத்தில் இருந்தால், தேடல் பக்கத்தில் உங்கள் தளமானது முதன்மைப்படுத்தி காட்டுவதற்குரியவாறு உங்கள் தளத்தை உவப்பாக்கம்(Optimize) செய்வது ஆகும்.  அதாவது Google Search Engine போன்ற தேடல் தளத்தில் ஒரு வார்த்தையை உள்ளிட்டு தேடும்போது, அந்த சொல்லுக்குரிய தளங்களை கூகிள் சர்ச் என்ஜின் ஆனது பட்டியலிட்டு, தரவாரியாக, அத்தளத்தில் பார்வையிட்டிருக்கும் வாசகர்களின் எண்ணிக்கை வாரியாக, அதிக பக்கப்பார்வைகள் பெற்றிருக்கும் தளங்கள் வாரியாக வரிசைப்படுத்தி, அதிகமாக வாசகர்கள், பார்வையாளர்கள் சென்று பார்த்த பக்கங்களையே முதன்மைப்படுத்திக் காட்டும். அவ்வாறு முதன்மைப்படுத்திக்காட்டியக்கூடிய தளங்களில் உங்கள் தளத்தையும் ஒன்றாக மாற்றுவதற்குப் பயன்படும் ஒரு தொழில்நுட்ப முறையே SEO எனப்படும் Search Engine Optimized ஆகும். சுருக்கமாக SEO என குறிப்பிடுவர்.

இதனால் உங்கள் தளமானது விரைவில் நல்ல நிலையை அடையும். முதல் பக்கத்திலேயே உங்கள் தளம் காட்டப்படுவதால், உலகத்திலுள்ள வாசகர்கள் உங்கள் தளத்தை அதிகம் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். அதிக வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வருவதால் உங்கள் தளத்தின் அலெக்சா ரேங்க் அதிகரிக்கும். தளத்தின் தரமும் உயரும்..

வாசகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகும். இதனால் உங்கள் தளமானது விரைவில் பிரபலமான தளமாக மாறிவிடும்.

Search Engine Optimize செய்ய என்ன செய்ய வேண்டும்?

இதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் உங்கள் வலைத்தளம் அல்லது பிளாக்கர் பிளாக்கை சர்ச் என்ஜினில் இணைக்க வேண்டும். இணையத்தில் பல்வேறு வகையான சர்ச் என்ஜின்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவைகளும், அவற்றில் உங்கள் பிளாக்கை எப்படி இணைப்பது என்பதைப் பற்றியும் நீங்கள் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் வலைத்தளத்தை ஒரே கிளிக்கில் 140 search Engine களில் submit செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

முதலில் நீங்கள் Rank on top Online என்ற இந்த தளத்திற்கு செல்லுங்கள்.

பிறகு அத்தளத்தில் இவ்வாறு ஒரு விண்டோவில் தெரியும். அங்கு உங்கள் வலைத்தள முகவரி (Website Address) மின்னஞ்சல் முகவரி(e-mail) ஆகியவற்றைக் கொடுக்கவும்.

பிறகு இறுதியாக submit என்ற பட்டனை அழுத்தவும். சிறிது நேர காத்திருத்தலுக்கு பிறகு உங்கள் வலைத்தளமானது 140 சர்ச்என்ஜின்களிலும் இணைக்கப்பட்டதாக செய்தி கிடைக்கும்.

இவ்வாறு உங்கள் தளத்தை நீங்கள் சர்ச்என்ஜினில் இணைத்த பிறகு, சிறிது நாட்களுக்குப் பிறகு உங்கள் தளத்தின் Traffic Rank அதிகரித்திருப்பதை உணரலாம். ஒரே கிளிக்கில் 140 சர்ச் என்ஜினில் உங்கள் தளத்தை இணைப்பதன் மூலம் அதிகளவு வாசகர்கள் கிடைப்பார்கள். அதே சமயம் தேடுதல்மூலமும் உங்கள் தளங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பு: இந்த தளத்தில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுக்கும்போது அதிகம் முக்கியமில்லாத (Alternate E-mail) மின்னஞ்சலைத் தரவும். இதனால் இதுபோன்ற தளங்களில் தேவையில்லாத Spam mail-களைத் தவிர்க்க முடியும்.


நன்றி நண்பர்களே...!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz