Friday 16 August 2013

தவறாக எழுதிய புத்தகத்தை "தீ' யிட்டு கொளுத்தியவன்! எங்கள் பாட்டன் பாண்டித்துரைத் தேவர்!!!

தவறாக எழுதிய புத்தகத்தை "தீ' யிட்டு கொளுத்தியவன்!
எங்கள் பாட்டன் பாண்டித்துரைத் தேவர்!!!

""மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு.மிக அறிவு பெற்றதாய் தானே நினைத்துக்கொண்டு ,

திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை வெளியிட்டார்.
 
""சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்"" என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான தலைப்பு.

ஒரு முறை பாண்டித்துரை தேவரை இந்த ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய' பணியைப் பற்றிச் சொல்லி தாம் பதிப்பித்த நூலின் ஒரு பிரதியையும் கொடுத்தார். 

பாண்டித்துரை தேவர் ஸ்காட்டிடம் இந்த நூலின் பிரதிகள் மொத்தத்தையும் தாம் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஸ்காட்டும் தேவர் தன் அரிய பணியைப் பாராட்டி அதில் மகிழ்ந்து எல்லாவற்றையும் வாங்குவதாக எண்ணிக் கொண்டு தன்னிடம் இருந்த எல்லா பிரதிகளையும் கொண்டு வந்து கொடுத்தார்.

முன்னூற்றுச் சொச்சம் பிரதிகளுக்கு பிரதி ஒன்றிற்கு ஒரு ரூபாய் வீதம் விலை கொடுத்து எல்லாவற்றையும் வாங்கிய தேவர்.

இராமநாதபுரம் சென்ற பின் அந்த புத்தகக் கட்டை கொண்டு வரச் செய்து எல்லாவற்றையும் "தீ"யிட்டுக் கொளுத்தினார் . " - இது வரலாறு.

தவறாக தமிழ் வரலாற்றை எழுத நினைத்தால்.. எங்கள் பாட்டன் பாண்டித்துரைத் தேவர் வழி நடப்போம்!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்

Udanz