Wednesday 14 August 2013

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் பொதுவாக அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள் மற்றும்தவிர்க்க வேண்டிய உணவுகள்





சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்

-அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள்:


1)நீர்,

2)இளநீர்,

3)காரட்மற்றும் பாகற்காய்,

4)கொள்ளு,

5)பாதாம் பருப்பு,பார்லி, ஓட்ஸ்,

6)பழங்கள்,பழச்சாறுகள் அதிலும் முக்கியமாக 

7)பைன்னாப்பிள் சாறு

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

1)உப்பு குறைத்துக்கொள்ளுங்கள்

2)காய்கறிகளில்தவிர்க்க வேண்டியவை

3)பழங்களில் தவிர்க்க வேண்டியவை

4)அசைவ உணவுகள் 

5)எள் முந்திரிப்பருப்பு சாக்லேட்

6)சாக்லேட் கலந்த தின்பண்டங்கள், காபி, டீ

மேலும் சிறுநீரக கற்களின் நான்கு வகைகற்களுக்கேற்ப சிறப்பு உணவு 

முறைகளை பற்றியும் பார்ப்போம் 



1)நீர் (தண்ணிர்)

தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும், கடினத்தன்மை உள்ள நீராய் இருந்தால் காய்ச்சி வடிகட்டி

குடிக்கவும்.

2)இளநீர் குடியுங்கள்

இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின்

முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்க வல்லவை.


3)காரட் மற்றும் பாகற்காய் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளுங்கள்


இவற்றில் சிறுநீரகக் கற் களின் படிகங் களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக 

கண்டறியப் பட்டுள்ளது.


4)பழங்கள், பழச்சாறுகள் (அடிகடிஅருந்துங்கள்)

வாழைப்பழம், எலுமிச்சை

இவற்றில் விட்டமின் B6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் 

கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச்

சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

5)அதிலும் முக்கியமாக பைன்னாப்பிள் சாறு

இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும்

நொதிகள் (Enzymes) உள்ளன.

6)கொள்ளு (வாரத்தில் 4 நாட்களாவது உன்னுங்கள்

இதில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் 

கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். 


7)பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்

போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில

காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு

தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள்

வருவதையும் தடுக்கும்.

8)உப்பு குறைத்துக்கொள்ளுங்கள்

உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியா 

வதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது 

கண்டறியப்பட்டுள்ளது.



தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் : 


1)காய்கறிகளில் தவிர்க்க வேண்டியவை

தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.) பாலக் கீரை,

பசலைக்கீரை இவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது.

கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக்

அமிலம் (Uric Acid) அதிகம் உள்ளது. பரங்கிக்காய் இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் 

பொருளான ப்யூரின்களும் அதிகம் (Purines) உள்ளன. இந்தக் காய்கறிகளைத் தவிர்க்கவும்.

2)பழங்களில் தவிர்க்க வேண்டியவை

சப்போட்டா, திராட்சை இவற்றில் ஆக்சலேட் அதிகம் இருக்கிறதாம்

3)எள் 

இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்

4)அசைவ உணவுகள் 

(நீங்க நர நரனு பல்லை கடிக்கறது எனக்கு கேக்குறது)ஆட்டிறைச்சி (Mutton), மாட்டிறைச்சி

(Beef),கோழிக் கறி (Chicken), முட்டை (Egg), மீன் (Fish) இவை அனைத்திலும் ப்யூரின்களும், யூரிக்

அமில மும் அதிகம். யூரிக் அமில வகைக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.


5)முந்திரிப்பருப்பு 

இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் கால்சியம் மற்றும்

ஆக்சலேட் கலந்தவை ஆகும். இதனைத் தவிர்க்கவும்.

6)சாக்லேட், சாக்லேட் கலந்த தின்பண்டங்கள், காபி, டீ 

சாக்லேட், சாக்லேட் கலந்த தின்பண்டங்கள், காபி, டீ ஆகியவற்றிலும் ஆக்சலேட் உள்ளது.

எச்சரிக்கை தேவை.


கற்களின் வகைகளுக்கேற்ற சிறப்பு உணவு முறைகள் :-



1)கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்த வகை கற்கள்:-

தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். அதிக கால்சியம் உள்ள பால், பால் பொருட்கள்

மற்றும் வேர்க்கடலை, ஆக்சலேட் அதிகம் உள்ள சாக்லேட், கோலா கலந்த பானங்கள்

மேற்கூறிய மற்ற உணவுகளை குறைத்துக் கொள் ளவும். வயிறு அல்சருக்கு சில சமயம்

எடுத்துக் கொள்ளும் ஜெலுசில் போன்ற கால்சியம் கலந்த ஆன்டா சிட் மருந்துகளைத்

தவிர்க்கவும். உணவில் உப்பையும் குறைத்துக் கொள்ளவும்.


2)யூரிக் அமில வகை கற்கள் :

தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். ப்யூரின்கள் அதிகஉள்ள மட்டன், சிக்கன், முட்டை, மீன்,

பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்கவும்.


3)ஸ்ட்ரூவைட் வகை கற்கள் :

இந்த வகை கற்கள் சிறுநீரகங்களில் கிருமி தாக்கத்தால் வருகின்றன. மருத்துவர்

பரிந்துரைக்கும் கிருமிக் கொல்லி மருந்துகள் (ஆன்டி பையாடிக்ஸ் -Antibiotics) மருந்துகளை

தவறாமல் எடுத்துக் கொள்ளவும் தினம் குறைந்தது 12 டம்ளர் நீர் அருந்தவும்.

4)சிஸ்டின் வகைக் கற்கள் :

இவை மிக அபூர்வமானவை. மீன் உணவை தவிர்க்கவும். தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz