Sunday 30 June 2013

ஆடியோ பைல்களை வீடியோ பார்மெட்டாக மாற்றம் செய்ய.



ஆடியோ பைல் பார்மெட்களாகிய WAV, MP3,WMA, AAC, AC3, FLAC, M4A, MKA , MP2, OGG, RA , AIF, AIFF, AIFC, AU போன்ற பைல் பார்மெட்களிலேயே ஆடியோக்களை கேட்டிருப்போம்.

இதற்கு பதிலாக ஆடியோக்களை வீடியோ பைலாக கன்வெர்ட் செய்ய முடியும். ஒரு புகைப்படத்தை பாடல் முழுவதும், பேக்ரவுண்டில் ஒட விட முடியும். நாம் சாதரணமாக ஆடியோ பைல்களை வெறும் ஒலி வடிவில் மட்டுமே கேட்க முடியும்.

 அதற்கு பதிலாக ஆடியோ பைல்களை ஒளி வடிவில் பெற்றால் எப்படி இருக்கும். அதற்கு உதவும் மென்பொருள்தான் RealA2V ஆகும். இந்த மென்பொருளுடைய வசதியின் மூலமாக கன்வெர்ட் செய்யப்படும் வீடியோ பைலினை முகநூல் (Facebook), யூடியூப் போன்ற தளங்களில் தரவேற்றம் செய்து கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி



இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.

பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் ஆடியோ பைலை தேர்வு செய்யவும். பின் வேண்டிய இமேஜ்யை தேர்வு செய்யவும். உங்களுக்கு பிடித்தமான இமேஜ்யை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ள முடியும். பின் Convert பொத்தானை அழுத்தவும்.

அடுத்ததாக தோன்றும் விண்டோவில் வீடியோ பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். சில நொடிகளில் உங்களுடைய ஆடியோவானது வீடியோ பைல் பார்மெட்டில் கன்வெர்ட் செய்யப்பட்டிருக்கும். 

இந்த மென்பொருளின் உதவியுடன் மிக விரைவாக ஆடியோவினை, வீடியோவாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz