அதிகம்
எழுத
நேரம்
இல்லாத
காரணத்தால் குறைவாக எழுதி
முடிக்கின்றேன்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் போனில்
தொடர்புகொள்ளவும்.அல்லது
பின்னூட்டமாக இடவும்.
உங்களாலும் இப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு .காம் போல் ஒரு குறுகிய பெயரை உபயோகிக்க முடியும்.அதுவும் இலவசமாக ....!என்ன நம்பமுடியவில்லையா?நான் கீழே விளக்கியுள்ளவாறு பண்ணுங்கள் உங்களுக்கே புரியும்.படங்கள் தெளிவாக தெரியவில்லை என்றால் படங்களின் மேலே கிளிக் செய்தால் தெளிவாக தெரியும்.
முதலில் இங்கே கிளிக் செய்தால் கீழே கொடுத்துள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் திறக்கும்.அதில் நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் நீங்கள் உங்கள் பிளாக்கிற்கு விட விரும்பும் பெயரினை அடித்து கிடைக்குமா என்று பார்த்து விட்டு ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.
நீங்கள் முதலியே உங்க சைட் நேம் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியிருந்தால்.சைட் நேம் ஒரு லைட் மஞ்சள் நிற பெட்டியில் தெரியும்.இந்த படத்தில் நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் உள்ள C NAME கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இப்போது அங்கு HOST என்று உள்ள இடத்தில் WWW உடன் சேர்த்து தங்களின் சைட் நேம் நான் படத்தில் கொடுத்துள்ளவாறு கொடுக்கவும்.அதன்பின் உள்ளவற்றில் என்ன கொடுக்க வேண்டும் என்பதையும் நான் கொடுத்துள்ளேன்.
ITL = 1D ; TYPE = C NAME ; VALUE = ghs.google.com
அனைத்தையும் நிரப்பிவிட்டு செட்டப் பட்டன் கிளிக் செய்து விடுங்கள்.இத்துடன் இங்கு செய்யவேண்டிய வேலைகள் முடிந்துவிட்டன.இனி பிளாக்கரில் என்ன செய்யவேண்டும் என்பதை இப்போது விளக்குகிறேன்.
முதலில் உங்களின் பிளாக்கர் அகௌண்டில் லாகின் செய்து கொள்ளுங்கள்.பிறகு எந்த பிளாக்கருக்கு நாம் முன்னாள் உருவாக்கிய சைட் நேம் கொடுக்க விரும்புகிறீர்களோ அதான் கீழ் உள்ள SETTINGS கிளிக் பண்ணுங்கள்.
செட்டிங்க்ஸ் பக்கம் வந்தததும் PUBLISHING கிளிக் பண்ணவும்.
பப்ளிஷிங் பக்கம் வந்ததும் அங்குள்ள பெட்டியில் சைட் நேம் இட்டால் வராது.எனவே SWITCH TO ADVANCED SETTINGS கிளிக் பண்ணவும்.
இனி நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் சைட் நேம் கொடுத்து கீழுள்ள கேப்ட்சா எழுத்துக்களை சரியாக அடித்து சப்மிட் செய்து விட்டு பாருங்கள்.இப்போது நீங்கள் சைட் நேம் கொடுத்த இடத்தின் கீழே டிக் அடிப்பது போல் இருக்கும் .இது எதற்கு என்றால் இப்பொழுது நாம் WWW உடன் தான் கொடுத்துள்ளோம்.WWW இல்லாமல் கொடுத்தாலும் இந்த வேப்சைட்டிற்கே வரவேண்டும் என்றால் டிக் செய்து இன்னொரு முறை சப்மிட் கொடுத்துகொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் புதிய குறுகிய சைட் நேம் உங்களின் பிளாக்கில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.ஒருசிலருக்கு மட்டும் இது வேலை செய்ய ஒருநாள் எடுத்துக்கொள்ளும். - See more at: http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/12/blog-post_22.html#sthash.QY7GYRDY.dpuf
No comments:
Post a Comment