Saturday 4 May 2013

பிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்படி?

பிளாக்கரில் புதிய வசதியான மொபைல், ஈமெயில் மூலம் எப்படி பதிவுகள் இடுவது என்பதனை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி சொல்லுகிறது இந்த பதிவு.

பதிவுகளின்
Dashboard -ல் நீங்கள் புதிதாக இரண்டு ஐகான்களை கண்டிருப்பலாம்.

1. மொபைல் போன் மூலம் பிளாக்கில் பதிவுகள் இட
2. ஈமெயில் மூலம் பிளாக்கில் பதிவுகள் இட





மொபைல் மூலம் பதிவுகள் இட முதலில் உங்கள் மொபைலை Blogger உடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். மொபைல் போன் ஐகானை கிளிக் செய்யவும். பின்பு வரும் செய்தியில் தொடுகிற Verification Code ஐ உங்கள் மொபைல் மூலமாக MMS வசதி மூலம் go@blogger.com என்ற முகவரிக்கு அனுப்பவும். உங்கள் மொபைல் போன் பிலாக்கருடன் பதிவு செய்யப்பட்டு விடும். இனி go@blogger.com க்கு நீங்கள் MMS மூலம் அனுப்பும் செய்திகள் உங்கள் பிளாக்கில் பதிவாக இடப்படும். US உபயோகிப்பாளர்கள் SMS மூலமாகவும் உங்கள் பிளாக்கை பதிவு செய்து கொண்டு பதிவுகள் இடலாம்.

ஈமெயில் மூலமாக பதிவுகள் இடவும் புதிய வழி உண்டு. Blogger இல் நீங்கள் புதிய ரகசிய ஈமெயில் முகவரி பெற்று கொள்ள வேண்டும். அதனை செய்ய சிறிய ஈமெயில் ஐகானை கிளிக் செய்து கொள்ளவும். உங்களிடம் Secret Code கேட்கும். கொடுத்தால் உங்களுக்கு ஒரு புதிய ரகசிய ஈமெயில் முகவரியை பிளாக்கர் அளிக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு நீங்கள் அனுப்பும் செய்திகள் புதிய பதிவாக உங்கள் பிளாக்கில் இடப்படும். உங்கள் பதிவு படங்களுடன் இருக்கலாம். ஆனால் 10MB அளவிருக்கு உட்பட்டதாக இருக்குபட்ட வேண்டும்.

இந்த பதிவு கூட இந்த முறை மூலமே இடப்பட்டது. இந்த வசதிகள் பதிவிடுவதை மிக எளிதானதாக்கி உள்ளது. செய்து பாருங்கள்.
Print this post

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz