Sunday, 5 May 2013

தங்களின் பிளாக்கின் வருகையாளரின் பற்றிய பதிவுகளை முழுமையாம அறிய சில வழிமுறைகள்


தங்களின் பிளாக்கிற்கு வருகை தரும் வாசகர்களின் முழு விவரங்கள் மேலும் தங்களின் பிளாக்கிற்கு எங்கு இருந்து வாசகர்கள் வருகிறர்கள் இதை போன்ற பல்வேறு விவரங்கள் அறிய சில வழிமுறைகள் உள்ளன, சில வலை தளங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.
HISTATS.COM இந்த வகை சேவையை அருமையாக வழங்குகிறது. இங்கு தங்களை உறுபினர் ஆக்கி கொள்ளவேண்டும். பின்னர் தங்களின் பிளாக்கை இங்கு பதிந்துக்கொள்ளுங்கள். அவர்கள் தரும் விட்கேட்கான கோடிங்கை தங்களின் பிளாக்கில் இடுங்கள். இனி தங்களின் பிளாக்கிற்கு வருகை தரும் வாசகர்களின் விவரங்கள் அனைத்தும் தங்களுக்கு தெரிவிக்கப்படும். இதன் சிறப்பு என்று சொன்னால், தங்களின் பதிவுகள் கூகுள் தேடல் பொறியில் பெற்றுள்ள ரேங்கையும் தெரிவிக்கிறது. மேலும் அதிகமாக தேடல் பொறியின் மூலம் வரும் வாசகர்களை பற்றியும் அறியலாம்.
நமக்கு கிடைக்கும் தகவல்கள்:
தற்போது ஆன்லைனில் உள்ள வாசகர்கள் விவரம், அவர்கள் எவ்வளவு நேரம் இருக்கிறர்கள் பற்றிய விவரம்.
தங்களின் பிளாக்கிற்கு வாசகர்களின் வருகைக்கு உதவி புரியும் வலைதளங்கள் பற்றிய விவரம்.
கூகுள் தேடல் இயந்திரத்தில் தங்களின் பதிவுகள் இடம் பெற்றுள்ள இடம்.
வருகைதரும் வாசகர்கள் வசிப்பிடம், மொபைல் அல்லது கணினி மூலம் பார்வை இடுவது பற்றி விவரம்.
அதிகமாக வாசகர்களை தங்கள் வலைதளத்திற்கு ஈர்த்த சில சொற்கள் பற்றிய விவரம்.
மேலும் பல விவரங்களை இலவசமாக தாங்கள் காணலாம்.
வேறு சில வலைதளங்களும் இந்த வகை சேவைகள் வழங்குகின்றன.
ICEROCKET--இந்த தளமும் மேற்குரிய சேவைகளை வழங்குகிறது. மேலும் சில வாசகர்களும் இந்த தளம் மூலம் நமக்கு கிடைக்கிறார்கள்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz