Thursday 9 May 2013

வலைப்பதிவின் தலைப்பை மாற்றி ட்ராஃபிக்கை அதிகரிப்போம்

வலைப்பதிவின் தலைப்பை மாற்றி ட்ராஃபிக்கை அதிகரிப்போம்

ப்ளாக்கரில் பதிவு இடுவோர்க்காக. பதிவின் தலைப்பை உற்று நோக்குங்கள். அங்கே வலைப்பூவின் பெயர் முதலிலும், பதிவின் தலைப்பு இரண்டாவதாகவும் தோன்றும். உங்கள் உலவியின் இடது உச்சியில் இதைக் காணலாம்.

ஒவ்வொரு பதிவிலும், வலைப்பூவின் தலைப்பு முதலாவதாக இருந்தால் தேடுபொறியின் கணக்கீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டு தேடும் குறிச்சொற்கள் சரியாக அமையாது. அதனால் தேடுபொறி வழியாக உங்கள் வலைப்பூவிற்கு வரவேண்டிய வாசகர்கள் வேறு வலைப்பூவிற்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது. ஆகவே ஒவ்வொரு பதிவின் தலைப்பையும், வலைப்பூவின் தலைப்பாக மாற்றி விடவேண்டும். இதற்கு ஒரு எளிய கோடிங் மாற்றம் செய்தாலே போதும்.

1. வலைப்பூவின் பயனர்பெயர், கடவுச்சொல் கொண்டு ப்ளாக்கரில் உள் நுழையவும்.
2. Dashboardல் க்ளிக் செய்து, Layout - Edit HTML க்குச் செல்லவும்.
3. அங்கே HTML கோடிங்கைப் பார்வையிடுவீர்கள்.
4. அதில் <title><data:blog.pagetitle/></title> இதைத் தேடவும்.
5. அதற்குப் பதிலாக கீழ்க்கண்ட கோடிங்கைச் சேர்க்கவும்.


<b:if cond= 'data:blog.pageType == &quot;index&quot;'>
<title><data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageName/></title>
</b:if>


பிறகு Template ஐ Save செய்து வலைப்பூவைப் பார்வையிடவும். இனிமேல் தேடுபொறியானது உங்கள் வலைப்பதிவுகளை இண்டெக்ஸ் செய்வதில் இருந்த சிக்கல்கள் மறைந்து ஏராளமான பார்வையாளர்களை நீங்கள் பெறுவீர்கள்.

ஆதாரம் : How to change Blog Title as Post title?

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz