Thursday 9 May 2013

உணவு பொருட்களை பாதுகாக்க சின்ன சின்ன குறிப்புகள்


உணவு பொருட்கள் வீணாகாமல் காப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். உணவு பொருளை வீணாக்குவது, மற்றொரு மனிதனின் உரிமையைப் பறிப்பதற்கு சமம் என்று உணருங்கள்.

தற்போது உணவு பொருட்கள் வீணாவதைத் தடுக்க சில சின்ன சின்ன குறிப்புகள் இங்கே.
பொதுவாக சுவையில்லாத உணவு பொருட்களே அதிகம் வீணாகின்றன. எனவே, சுவையாக சமைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
முதன் முதலாக எந்த உணவையும் சமைத்தால் குறைந்த அளவில் சமைத்துப் பாருங்கள். உணவு சுவை குறைந்தாலும் அதிகம் வீணாவது தவிர்க்கப்படும்.
சமைத்த உணவு பொருளை திறந்து வைக்க வேண்டாம். அதில் ஏதேனும் பூச்சிகள் விழுந்தால் அதனை தூக்கி எறிய நேரிடும்.
சமைத்த உணவை பத்திரமாக எடுத்து வையுங்கள். தேவைப்படும் போது அதனை சூடு படுத்துவதும் அவசியம்.
ஒவ்வொரு நாளும் மீதாமாகும் உணவை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து சமைக்கும் போது அந்த அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
உணவு பொருள் வீணாகும் வகையில் கவனிக்காமல் வைக்க வேண்டாம். கண்ணில் படும் இடத்தில் உணவு பொருட்களை வைப்பது நல்லது.
புதிய உணவு பொருளை கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டுப் பார்த்து உங்களுக்குப் பிடித்தால் தேவையான அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
சுவை பற்றி தெரியாத உணவை அதிகமாக எடுத்து தட்டில் போட்டுக் கொள்ள வேண்டாம்.
தேவைக்கு அதிகமாக உணவு பொருட்களை வாங்க வேண்டாம்.
காலையில் சரியான நேரத்துக்கு சமைத்து வைத்தால், அனைவருக்கும் சாப்பிட நேரமும் கிடைக்கும். யாரும் உணவை தவிர்த்துவிட்டும் கிளம்ப மாட்டார்கள்.
பண்டிகை நாட்களில் அளவுக்கு அதிகமாக உணவை தயாரிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.
விருந்தினர்களின் வருகையின் போதும், அவர்களுக்கு தேவையான அளவை, எப்போதும் செய்யும் உணவின் அளவோடு சேர்த்து செய்யுங்கள். மேலும் கூடுதலாக செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
வீட்டிற்கு வருவதாகக் கூறிய விருந்தினரோ, நண்பரோ நிச்சயமாக வருகிறாரா என்பதை உறுதி செய்து கொண்டு சமையுங்கள்.
எங்காவது செல்லும் போது கையில் வைத்திருக்கும் உணவு விரைவில் வீணாகிவிடும் என்று நினைத்தால், போகும் வழியில் உணவுத் தேவைப்படும் யாருக்கேனும் கொடுத்து விடுங்கள்.
தர்பூசணி, மிலாம்பழம் போன்ற மிகப்பெரிய பழங்களை வாங்கி வந்து உண்ணும் போது அதனை அண்டை அயலாருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டால் வீணாவதை தவிர்க்கலாம்.
ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தால் உணவு வீணாகிவிட்டாலும் அதனை மாடுகளுக்கோ, நாய்க்கோ வைக்கும் வழியிருந்தால் அவ்வாறு செய்து விடுங்கள்.
வீணான பழைய அரிசி போன்ற தானியங்களை பறவைகள் அதிகம் வரும் இடங்களில் இறைத்து விட்டால் கூட நல்லதுதான்.
பூமி நமக்காக அளிக்கும் உணவு பொருட்களை நாம் மீண்டும் பூமிக்கே தருவதை தவிர்க்கலாம். மனித குலத்துக்கு நன்மை பயக்கலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz