Monday 22 April 2013

உங்கள் பிளாக்கரில் Showing posts with label - show all post ஸ்டேட்டஸ் மெசேஜை நீக்க

வணக்கம் அன்பு நண்பர்களே.. உங்கள் பிளாக்கில் ஒவ்வொரு முறையும் லேபிள்ஸ் என்று சொல்லக்கூடியதை கிளிக் செய்யும் போது Showing posts with label இவ்வாறு ஒரு பெட்டியுடன் கூடிய செய்தி தோன்றுமல்லவா?

இது பார்ப்பதற்கு அழகற்றும், நமது வலைப்பூவில் தேவையில்லாமல்  இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும்..

உதாரணத்திற்கு படத்தைப் பார்க்கவும்.
showing posts with label msg இருக்கிற போது
showing posts with label msg நீக்கிய பிறகு

இவ்வாறு showing posts with lable msg நீக்க  எண்ணினால்,

முதலில் உங்களுடைய பிளாக்கில்  Design==>Edit Html சென்று உங்களுடைய Template(வார்ப்புரு) - ஒரு பேக்அப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு Expand Widget Template என்பதில் டிக் குறியிட்டு கீழ்கண்ட நிரல் வரிகளைத் தேடுங்கள்..

<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

<data:navMessage/>

<data:navMessage/>

</b:if>
</b:includable>

நிரல் வரியை தேட Ctrl+F  பயன்படுத்தலாம்..பிறகு இதை நீக்கி விட்டு நீக்கிய இடத்தில் கீழ்கண்ட நிரல் வரிகளை சேர்க்கவும்..

<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

</b:if>
</b:includable>

இந்த நிரல் வரியை சேர்த்த பிறகு உங்களதுTemplate(வார்ப்புரு)வை Save Template என்பதை சொடுக்கி சேமித்துக்கொள்ளவும்.. அவ்வளவுதான். இனி உங்களில் லேபிள்களை சொடுக்கி பதிவுகளைப் பார்வையிடும்போது மேலே Showing posts with label என்பது போன்ற Status Msg வராது..

நாள்தோறும் புதிய வலைப்பதிவர்களின் வரவு அதிகமாக இருப்பதாலும், வலைப்பதிவர் நண்பர் ஒருவர் கேட்டதற்கிணங்கவும் இப்பதிவு வெளியிடப்பட்டது.  தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால்  இந்த பக்கத்தை நீங்கள் புக் மார்க் செய்து வைத்துக்கொள்ளலாம்..

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்

Udanz