வணக்கம் நண்பர்களே..!
நேற்றையப் பதிவில் 'உங்கள் பதிவுகள் காப்பி செய்யப்படுகிறதா?' என்ற
தலைப்பில் ஒரு பதிவு வெளியானது அல்லவா? அதன் தொடர்ச்சியாக உங்கள்
பதிவுகளுக்கு காப்பி ரைட் வாங்குவது எப்படி(how to get copy right online?)
என்பதைப் பார்ப்போம்.
இணையத்தில் இலவசமாக இந்த காப்பிரைட் கொடுக்க சில
தளங்கள் இருக்கின்றன. அவற்றில் http://myfreecopyright.com/ என்ற தளத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த தளத்தில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து உங்களுக்கான
கணக்கைத் துவக்கிக் கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல்
அனுப்பப்படும். அதில் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி அதிலுள்ள ஒரு இணைப்பை
சொடுக்குவதன் மூலம் உங்களுக்குத் தேவையான காப்பிரைட் பெற முடியும். இது
மிகவும் எளிதான ஒன்றுதான். இதனால் ஓரளவிற்கு உங்கள் வலைப்பதிவுகளைக் காக்க
முடியும்.
மேலும் உங்கள் தளத்திலேயே நீங்கள் ஒரு அறிவிப்பை எழுதிவிடலாம்..
இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும்
காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி
பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க
நடவடிக்கை எடுப்படும். நாசூக்காக இப்படி எழுதிவிடலாம். இது ஒரு முறைமுக மிரட்டல்தான்.
அப்படியும் உங்கள் கட்டுரைகள், பதிவுகள் காப்பி அடித்து
வெளியிட்டார்களென்றால் அவர்களுக்கு மெயில் அனுப்பி எச்சரிக்கை செய்யலாம்.
இதனால் மேலும் நம் தளத்திலிருந்து பதிவுகளை காப்பி அடிப்பது
தவிர்க்கப்படும். இதுவரைக்கும் அனுமதியின்றி வெளியிட்ட பதிவுகளை நீக்கச்
சொல்லலாம். அல்லது வெளியிடப்பட்ட பதிவுகளில் நம்முடைய தளத்திற்கு link
கொடுக்கச் சொல்லாம்.
இவ்வாறு வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் கேட்காமல் இருந்தால்.? அவர்களைப்
பற்றிய புகாரை கூகிளுக்கு அனுப்பலாம்(send report to Google). இது இறுதியாக
செய்யப்பட வேண்டிய ஒன்று. அதற்கு முன்பே பதிவுகளைக் காப்பியடித்தவர்கள்
பயந்து பதிவுகளை நீக்கிவிடுவார்கள்.. அல்லது பதிவிற்கான இணைப்பையும்
கொடுத்துவிடுவார்கள். இவ்வாறு எந்த ஒரு மாற்றத்தையும் அவர்கள் செய்யாமல்
நம்முடைய பதிவுகளைத் தொடர்ந்து பயன்படுத்தினார்களென்றால், கூகுளில் புகார்
செய்து அவர்களின் பிளாக்கையே தடைச் செய்யக்கூடிய வழிமுறைகளும்
இருக்கின்றன(Blog block). அவற்றைப் பற்றி நேரம் கிடைத்தால் அடுத்த பதிவில்
பார்க்கலாம்.
புதிய நண்பர்களே.. இன்னும் ஏராளமான பயனுள்ள பதிவுகள் நம்முடைய சாப்ட்வேர்
சாப்ஸ் (softwareshops.blogspot.com)தளத்தில் இடம்பெற உள்ளன.. ஒவ்வொரு
பதிவைப் பற்றிய தங்களின் கருத்துகளை விருப்பு வெறுப்பின்றி எழுதுங்கள்.. !
உங்களுடைய கருத்துகள் எதுவாயினும் இங்கு வெளியிடப்படும்.
நன்றி நண்பர்களே..!!!!!
No comments:
Post a Comment