Sunday 14 April 2013

இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க

இரண்டே நிமிடத்தில் உங்கள்
நீங்கள் இணையத்தில் சுற்றும் பொழுது பார்த்து இருக்கலாம் சில பெரிய தளங்கள் அவர்களுக்கு என ஒரு நீட்சியை உருவாக்கி வைத்து இருப்பார்கள் அதை நம் உலவியில் இணைத்து கொண்டால் அவர்களின் புதியபதிவுகள் உட னுக்குடன் அதில் அப்டேட் ஆகிவிடும். அது போன்று உங்கள் தளத்திற்கும் சுலபமாக ஒரு பிரவுசர் நீட்சியை உருவாக்குவது எப்படி என இங்கு பார்ப்போம்.
இதனை உருவாக்க அதிக தொழில்நுட்ப அறிவு தேவையில்லை மற்றும் இரண்டே நிமிடங்களில் உங்கள் தளத்திற்கான நீட்சியை உருவாக்கி விடலாம். இந்த நீட்சியை உருவாக்குவதால் உங்கள் வாசக்ராகளுக்கு உடனுக்குடன் உங்களின் பதிவு சென்றடையும் மற்றும் கடைசி 25 பதிவுகளை வாசகர்கள் அவர்களின் உலவிகளில் பார்த்து கொள்ளலாம்.
கீழே உள்ள பட்டனை அழுத்தி வந்தேமாதரத்தின் நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்து சோதித்து கொள்ளுங்கள்.


Extension Factory என்ற இணையதளம் உங்கள் தளத்திற்கு என சிறந்த நீட்சியை சுலபமாக உருவாக்கி தருகிறது. இதில் உருவாக்கப்படும் நீட்சிகள் Chrome 5+, IE 8+, Safari 5+, Firefox 3+ போன்ற உலவிகளில் நன்றாக இயங்குகிறது. விண்டோஸ், மேக், லினக்ஸ் கணினிகளில் இருந்து வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ள்ளது.

நீட்சி உருவாக்கும் வழிமுறை:

  • முதலில் இந்த லிங்கில் சென்று Extension Factory என்ற தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • அதில் முதலில் இருக்கும் சிறிய கட்டத்தில் உங்கள் தளத்தின் முகவரியை http:// என்பதோடு சேர்த்து கொடுக்க வேண்டும்.
  • முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Create Your Extension என்ற பட்டனை அழுத்தவும்.
  • ஒரு சில வினாடிகளில் உங்கள் தளத்திற்கான நீட்சி உருவாகிவிடும். பரிசோதிக்க Test the Extension என்ற பட்டனை அழுத்தி நீட்சியை உங்கள் உலவியில் இணைத்து பரிசோதனை செயுங்கள்.
நீட்சி சரியாக வேலை செய்யின் அதை உங்கள் வாசகர்களுக்கும் தெரிவிக்க அங்கு கொடுக்கப்பட்டுள்ள HTML கோடிங்கை காப்பி செய்து நீங்கள் பதிவிடும் பகுதியில் Edit HTML பேஸ்ட் செய்து உங்கள் வாசகர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
அந்த தளத்தில் உள்ள Customize your install button என்பதை அழுத்தி டூல்பாரின் வகையை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் மேலும் பல வசதிகளை விரைவில் அறிமுக படுத்த இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz