what is share market? what is sensex?
பங்குச் சந்தை என்றால் என்ன?
(What is share Market)
இதில் சந்தை என்றால் என்ன என்பது நமக்குத் தெரியும். அதாவது பொருட்களை வாங்கவும், விற்கவும் பயன்படும் இடமே சந்தை. இதற்கு குறிப்பிட்ட இடம் தேவைப்படுகிறது. அந்த இடத்தில் வியாபாரிகள் கூடி பொருட்களை வாங்கவோ, விற்கவோ செய்கின்றனர்.
அதென்ன பங்குச் சந்தை?
பங்குச் சந்தை என்பது ஒரு பெரிய நிறுவனம் தொழில் தொடங்க தன்னுடைய சொந்த முதலீட்டோடு, பொது மக்களையும் பங்குதார்ரகளாக சேர்த்துக்கொண்டு வியாபாரம் நடத்துவது ஆகும். இதில் இலாபமும், நட்டமும் இருதரப்பினரையும் சாரும்.
சுருக்கமாக சொல்வதெனில் நீங்கள் புதியதாக ஒரு தொழில் ஆரம்பிக்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு முதலீடு தேவைப்படும் இல்லையா? அந்த முதலீடு சிறிய அளவில் இருப்பின் எப்படியோ சமாளித்து உங்களுடைய பணத்தையே முதலீடாக போட்டுவிடுவீர்கள்.
செய்யும் தொழில் அதிக மதிப்புடையாக இருப்பின், அவற்றிற்கு அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. அவ்வாறான சமயங்களில் உங்களுடைய சொந்தப் பணத்துடன், வேறு எங்கேனும் கடன் வாங்கி அதை செய்ய முற்படுவீர்கள். இது ஒரு வகை.
அதே தொழில் அல்லது வியாபாரம் செய்ய மிகப்பெரிய முதலீடு (பல கோடி ரூபாய் மதிப்பீட்டில்) தேவைப்படுகிறது. ஆனால் போதுமான பணம் உங்கள் கையில் இல்லை. வியாபாரத்தை தொடங்கினால் நல்ல இலாபம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.
இதுபோன்ற சமயங்களில் உதவுபவைதான் பங்குகள். நீங்கள் உங்கள் நிறுவனத்திற்கான பங்குகளை வெளியிடலாம். உதாரணமாக உங்களுடைய நிறுவனத்திற்கு தொழில் அல்லது வியாபாரம் தொடங்க ரூபாய் 2 கோடி தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
இப்பொழுது நீங்கள் அதற்கான பங்குகளை வெளியிடலாம். அதாவது இரண்டு கோடி ரூபாயை இரண்டு லட்சம் பங்குகளாக பிரித்து, அவற்றை இருபது ரூபாய் முக மதிப்பாக்கி (Face Value) பொது மக்களிடம் விற்கலாம். அவர்கள் தங்களுடைய வசதிகளுக்கேற்ப அப்பங்குகளில் முதலீடு செய்வார்கள். அதாவது அவர்களும் நீங்கள் தொடங்கும் தொழிலில் 'பங்காளிகள்' ஆகிவிடுகின்றனர்.
இவ்வாறு செய்யும்பொழுது, நிறுவனம் தொடங்கும் வியாபாரம் அல்லது தொழில் கிடைக்ககூடிய இலாபத்தை பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுக்கும். இதற்கு இலாப பங்கு (டிவிடெண்ட் - Dividend) என்று பெயர்.
இதில் நஷ்டம் ஏற்பட்டாலும் பங்குதாரர்களுக்கும் பங்கு உண்டு. அதாவது எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறதோ, அந்தளவிற்கு பங்குகளில் முதலீடு செய்யப்பட்ட பணமும் நஷ்டமடையும்.
சுருக்கமாகச் சொல்வதெனில் குறிப்பிட்ட அந்த நிறுவனம் தொழில் அல்லது வியாபாரம் தொடங்க பொதுமக்களையும் பங்குதார்ரகளாக சேர்த்துக் கொள்கிறது. தொடங்கிய வியாபாரத்தில் இலாபம் அடைந்தால் அந்த இலாபத்தில் அவர்களுக்குப் பங்கு உண்டு. அதே சமயம் நஷ்டம் வந்தாலும் அதிலும் அவர்களுக்கும் பங்கு உண்டு (Capital Loss). அவ்வளவுதான்.
பங்குகளை எப்படி விற்பது?
(How to Sale Shares)
இவ்வாறு மொத்த முதலீட்டை பங்குகளாக்கி, அப்பங்குகளை கணினி மூலமாகவோ, அல்லது புரோக்கர்கள் மூலமாகவோ விற்கலாம்.
இந்தியாவில் மும்பையை தலைமையிடமாக்க கொண்டு BSE Sensex இயங்குகிறது. இதில் முப்பது மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளின் போக்கைப் பொறுத்தே, அன்றைய பங்குச் சந்தை நிலவரத்தின் மதிப்பு கணிக்கப்படுகிறது.
இந்திய பங்கு மார்க்கெட்டின் நிலவரத்தை நிர்ணயிக்கும் நிறுவனங்கள்:
- பஜாஜ் ஆட்டோ லிமிடெட்
- பாரதி ஏர்டெல் லிமிட்டெட்
- பி.எச்.இ. எல்
- சிப்லா லிமிடெட்
- இந்தியா நிலக்கரி நிறுவனம்
- DLF Ltd
- HDFC Ltd
- எச்டிஎஃப்சி வங்கி லிமிடட்
- ஹீரோ மோட்டோ கார்ப் லிமிடட்
- ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
- ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
- ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்
- இன்ஃபோசிஸ் லிமிடெட்
- ஐடிசி லிமிடெட்
- Jaiprakash Associates Ltd
- Jindal Steel & Power Ltd
- லார்சன் & டூப்ரோ லிமிடெட்
- மகிந்திரா அண்டு மகிந்திரா
- மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட்
- தேசிய அனல் மின் நிறுவனம்
- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்
- ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்
- பாரத ஸ்டேட் வங்கி
- Sterlite Industries Ltd
- Sun Pharmaceutical Industries Ltd
- டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்
- டாட்டா மோட்டார்ஸ் லிமிடெட்
- டாட்டா பவர்
- டாட்டா ஸ்டீல் லிமிடெட்
- விப்ரோ லிமிடெட்
- டி.எல்.எஃப்
- எச்.டி.எஃப்.சி
- ஜெய்ப்பிரகாசு இண்டஸ்ட்ரீசு
- ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர்
- ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீசு
- சன் ஃபார்மசூட்டிகல்சு இண்டஸ்ட்ரீசு லிமிடெட்
சென்செக்ஸ் என்றால் என்ன?
சென்செக்ஸ் என்பது பங்குச் சந்தையில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான சொல் ஆகும். இது பங்குச் சந்தையின் குறியீடாக (Symbol of ShareMarket) உள்ளது.
சென்செக்ஸ் என்பதின் விளக்கம் Sensitive Index என்பதின் சுருக்கம் ஆகும்.
சென்செக்ஸ் என்பது மும்பை பங்குச் சந்தையின் மிக அதிக வியாபாரம் செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் உள்ளிட்ட ஒரு விற்பனைக் குறியீடு.
பங்கு சந்தைகள்
- மும்பை பங்குச் சந்தை,
- தேசிய பங்குச் சந்தை
- எம்.சி.எக்ஸ். - எஸ்.எக்ஸ்.
வெற்றிகரமான பங்குச் சந்தை முதலீட்டாளராக நீங்களும் ஆகலாம். பங்குச் சந்தை என்றால் என்ன? என்பதைப்பற்றிய அடிப்படை விவரங்கள் மட்டுமே இப்பதிவில் எழுதியுள்ளேன்..
பங்குச் சந்தைப் பற்றிய எனக்குத் தெரிந்த விபரங்களையும் இனி தொடர்ந்து எழுதலாம் என நினைக்கிறேன்...
தொடர்ந்து எழுதலாமா வேண்டாமா என தீர்மானிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.. அதாவது நீங்கள் கொடுக்கும் ஆதரவில்தான் உள்ளது. நீங்கள் விரும்பினால் பங்குச் சந்தையில் உள்ள சூட்சுமங்கள் (Secret of Share market) அதாவது, நஷ்டமடையாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி எதிர் வரும் பதிவுகளில் எழுதலாம் என நினைத்திருக்கிறேன்.
உங்களுக்கு எப்படி? உங்களுடைய எண்ணம் எப்படி உள்ளது என்பதை கருத்துரையின் மூலம் தெரிவியுங்கள். நன்றி..!
No comments:
Post a Comment