வணக்கம்
நண்பர்களே..! நம் கணினியில் நாம் ஏராளமான கோப்புகளை வைத்திருப்போம்.
அவற்றில் ஒரு சில அதி முக்கியத் தகவல்களைக் கொண்டதாக இருக்கும். இந்தக்
கோப்புகளானது அலுவல் சார்ந்தோ, அல்லது சொந்த விஷயங்களை உள்ளடக்கியதாக கூட
இருக்கலாம். இத்தகைய கோப்புகளை நாம் தினந்தோறும் அப்டேட்
செய்துகொண்டிருப்போம். இவற்றின் பாதுகாப்பு கருதி இத்தகைய கோப்புகளை ஒரு
நகல்(Backup) எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.
பேக்அப்(Backup) என்றால் என்ன?
நம்முடைய கோப்புகள் அல்லது டேட்டாக்களை காப்பி செய்து அதை ஒரு நகலெடுத்து வைத்துக்கொள்வதைத்தான் ஆங்கிலத்தில் பேக்கப் என்கிறோம். ஆட்டோமேட்டிக்கா பேக்அப்(automatic backup softwares) எடுக்கும் மென்பொருள் இருக்கின்றன.
ஒரு சிலர் தம்மிடமுள்ள கோப்புகளை மேம்படுத்தும்போது அவற்றிற்கான நகலையும் தவறாமல் எடுத்து வைப்போம். அதாவது Duplicate's File ஒன்றை உருவாக்கி வைப்போம். அவ்வாறு உருவாக்கி வைக்காதவர்கள் முதலில் உங்களுடைய கோப்புகளை நகலெடுத்துப் பழகிக்கொள்ளுங்கள்.
இது எதற்கென்றால் ஒருவேளை உண்மையான கோப்புகளை நாம் இழக்க நேரிடும்போது நகல்கோப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படித்தான் நண்பர் ஒருவர் தன்னுடைய அலுவல் சார்ந்த கோப்பு ஒன்றை வீட்டுக் கணினியில் வைத்திருந்து பயன்படுத்திக்கொண்டிருந்தார். ஒரு நாள் வைரஸ் தாக்கத்தால் கோப்பு முற்றிலும் corrupt ஆகிவிட்டது. ஒரு பேக்அப் எடுத்து வைத்திருந்தால் கோப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் பாதுகாத்திருக்கலாம் என்று புலம்பினார். இந்த நிலை உங்களுக்கும் ஏற்படாமல் இருக்கவே இந்தப் பதிவு.
கிடைக்கிற நேரத்தில் இவ்வாறு முக்கிய கோப்புகளை நகலெடுக்க ஏது நேரம்? என்கிறீர்களா? உங்கள் பணிச்சுமையைக் குறைப்பதற்காவும், உங்கள் நேரத்தைக் குறைப்பதற்காக, உங்களின் முக்கியமான கோப்புகளை நகலெடுப்பதற்காகவே ஒரு சில மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
AllwaySync-9-2-23 என்ற இம்மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவிய உடன் , எந்த கோப்பை பேக்கப் எடுக்க வேண்டும். பேக்அப் எடுத்த கோப்பை எங்கு சேமிக்க வேண்டும் என கொடுத்துவிட்டால் போதுமானது.. நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் முக்கியமான கோப்புகளை திறந்து வேலை செய்து முடித்த பிறகும், அந்த கோப்புகளுக்கான பேக்கப்பை இம்மென்பொருள் தானாக எடுத்துவைத்துக்ககொள்ளும்.
இம்மென்பொருளைத் தரவிறக்க Download AllwaySync 9-2-23 free backup software
SyncBack 3.2.19.0 இந்த மென்பொருளானது ஃப்ரீவேர் வகையைச் சார்ந்ததாகும். இம்மென்பொருள் நம்முடைய கோப்புகள் எங்கிருந்தாலும் அவற்றை காப்பி செய்து வேண்டிய backup எடுத்து நமக்கு அளிக்கிறது.
இமென்பொருளைத் தரவிறக்க சுட்டி : Download SyncBack 3.2.19.0 software

No comments:
Post a Comment