Sunday 14 April 2013

ஜிமெயிலை ஓபன் செய்யாமலேயே மின்னஞ்சல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு....

ஜிமெயிலை ஓபன் செய்யாமலேயே
தற்போதைய உலகில் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு கூகுள் அளிக்கும் புத்தம்புது வசதிகள் தான் முக்கிய காரணமாகும்.
ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உள்ள Settings என்பதில் ஜிமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் உள்ளிட்டவும்.
அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை செட் செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது Sound Alert வரும்மாறும் செட் செய்யலாம்.
தற்போது புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் Task Bar-ல் Indication தோன்றும். அதை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz