Monday, 11 March 2013

இணையதள வடிமைப்பிற்கு உதவும் HTML Editor

http://www.usilampatti-chellappa.blogspot.in/2013/01/online-html-instant-editor-html-editor.html

இணையதளம் வடிவமைக்க அடிப்படை மொழி HTML. பொதுவாக HTML நிரலை நோட்பேடில் எழுதி அதை இணைய உலவியின் மூலம் திறந்து அதனுடைய வெளிப்பாட்டை பார்ப்போம்.

அவ்வாறில்லாமல், ஆன்லைன் HTML Edtior -ஐப் பயன்படுத்தி உடனுக்குடன்
அந்த வரிகளுக்குரிய ouput-ஐ பார்க்கலாம்.
இதன் மூலம் எழுதும் HTML வரிகள் சரியானதுதானா உடனே அறிந்துகொள்ள முடிகிறது.

நமது தங்கம்பழனி வலைத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் HTML அடிப்படைப் பாடங்கள் படிப்பதன் மூலமும் எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள முடியும்.

தற்காலத்தில் இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் website, blog, webblog, web page இப்படி ஏதேனும் தமக்கென ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அவர்கள் தாங்கள் விரும்பும்படி அப்பக்கத்தை வடிவமைக்கவே விரும்புகின்றனர். அவ்வாறானவர்களுக்கும், புதிதாக HTML பயிலும் மாணவர்களுக்கும் இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வசதியை கொடுக்கும் தளம் ஹெச்.டி.எம்.எல்.இன்ஸ்டன்ட்.காம் 
இத்தளத்திற்கு சென்றவுடன் படத்தில் உள்ளபடி இடது பக்கம் HTML மொழியை தட்டச்சு செய்தால் உடனடியாக வலது பக்கத்தில் அவற்றிக்கான வெளிப்பாடு (Output) தோன்றுகிறது.

online html instant editor


HTML -ல் ஏற்படக்கூடிய அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு தரப்படுகிறது. புதியதாக கற்பவர்களுக்கு நிச்சயம் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு HTML கட்டளைகளும் எவ்வாறு இயங்குகிறது.. எதற்குப் பயன்படுகிறது என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடிவதுதான்.

மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாது.

நன்றி நண்பர்களே..!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz