Sunday 10 March 2013

இஞ்சியின் பயன்கள்..!!

 
நமது வீட்டில் பயன்படுத்தும் சாதாரண இஞ்சிக்கு இத்தனை பயன்களா..?
எனக்கே ஆச்சர்யம்தான்... பாருங்கள் வாசகர்கள்... இஞ்சியின் மகிமையை...!

படித்து பயன்பெற அற்புத மருத்துவ முறைகள்..!

பித்த வாய்வு வயிற்றுப் பொருமல் புளித்த ஏப்பம் வந்தால்...??!!

கொஞ்சம் இஞ்சியை எடுத்துத் தட்டிப் பிழிந்து அதன் சாற்றை ஒரு மங்கு அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் விட்டு,
சற்று நேரம் தெளிய வைத்து, அதன் கீழ்த் தெளிந்த சுண்ணாம்புத் தண்ணீரை இறுத்துவிட்டுத் தெளிந்த நீருடன் கொஞ்சம் எலுமிச்சைம்பழம் சாறு விட்டு காலையில் மட்டும் 3 நாள் சாப்பிடத் தீருமாம்..

பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக செய்து பார்த்துவிடலாமே..!!

பித்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது..

எப்படி?

ஒரு மருந்து தயார் செய்வோம்...

ஒரு பெரிய இஞ்சியை எடுத்து வட்டத் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.. அதன் மேல் ஈரம் காயும் வண்ணம் சூரிய ஒளியில் சற்று உலர வைக்கவும்... அதன்பின் அதனை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு அத்துண்டுகள் மூழ்கும் அளவிற்கு தேன் நிரப்பி வைத்துக்கொள்ளவும்.

இஞ்சி தேன் கலந்த பாட்டிலை நன்றாக குலுக்கி சூரிய ஒளியில் வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்துப் பயன்படுத்தவும்..

தினமும் 2 அல்லது 3 துண்டுகள் காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட பித்தம், வாய்வு போயே போச்..!

வாய்க் கசப்பு நீக்கவும் இஞ்சி பயன்படுகிறது

சிலருக்கு வாய்க் கசந்ததுபோல் இருக்கும்.. அச்சமயங்களில் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை எலுமிச்சை சாற்றுடன் நன்றாக ஊறவைத்து அதை காலையில் எடுத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.. இவ்வாறு மூன்று நாட்கள் செய்தால் வாய்க்கசப்பு அறவே நீங்கிவிடுமாம்..
 

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz