Sunday 10 March 2013

பயன்மிக்க புதிய தொழில்நுட்ப தகவல்கள்...

 
தொழில்நுட்பம் புதுசு (New Technology News)

வணக்கம் நண்பர்களே..!

தொழில்நுட்பம் புதுசு என்ற இந்த பதிவில் பல புதிய தொழில்நுட்பங்கள் (New Technology News) அடங்கிய செய்திகளைப் பார்ப்போம்.
automatic prevention accident bike
தானாகவே விபத்தை தடுக்கும் பைக

தானாகவே விபத்தை தடுக்கும் பைக்

(automatic accident prevention bike)
தற்போது வாகன விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக சொல்வதானால் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று உயிரைவிடுவது மிகவும் பரிதாபத்துக்குரிய செயலாகும்.

ஒரு இளைஞர் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கிவிட்டாலே அவர் ஹீரோவாகி விடுகிறார். நெடுஞ்சாலைகளில் அவர்கள் செல்லும் வேகம், சில சமயம் சாகசங்கள் செய்ய முயற்சி மேற்கொள்ளும்போது வாகனம் விபத்துக்குள்ளாகி விலை மதிப்பற்ற உயிரை விட வேண்டியிருக்கிறது. இவர்கள் பாதுகாப்புக்காக தலைவக்கவசம் (Helmet) அணிவதையே கவுரவ குறைச்சலாக எண்ணுகிறார்கள்.

விளைவு, நீண்ட காலம் பூமியில் வாழ்ந்து சாதனைப்படைக்கவிருந்த மதிப்புமிக்க உயிரைவிட்டு விடுகிறார்கள்.

இவர்களையெல்லாம் சொல்லி திருத்த முடியாது என்று எண்ணியோ இந்த நிறுவனம். இவர்கள் தயாரித்திருக்கும் பைக்கை பாருங்கள்..

மிகவும் பாதுகாப்பான முறையில் விபத்தை தடுக்கும் வித்த்தில் ஒரு பைக்கை உருவாக்கியிருக்கிறார்கள்.

கிட்டதட்ட Mini Car போன்று தோற்றமளிக்கிறது. முற்றிலும் மூடப்பட்டு இந்த பைக் தயாரிக்கபட்டுள்ளது.

சான் பிரான்ஸ்கோவில் அமைந்துள்ள LIT MOTORS நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது.

மூடிய நிலையில் உள்ள இந்த பைக்கானது, பைக் எந்த நிலையில் சென்றாலும் தானாவே தனது நிலையை சமநிலைப்படுத்திக்கொள்ளும்(Automatic) என்பதே இத்தாயாரிப்பின் சிறப்பு.  இதனால் பைக்கானது விபத்திலிருந்து முற்றிலும் காப்பாற்றப்படுகிறது.


இந்த வீடியோவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.



குரல் அடிப்படையிலமைந்த புதிய தொலைபேசி Blackberry 10 


செப்பேசி உலகில் பல மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம். புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வித்தியாசமான, பயன்மிக்க பல Android இயங்குதளங்களை அடிப்படையில் அமைந்த பல புதிய செல்பேசிகளை நாம் கண்டு வருகிறோம். அந்த வகையில் Blackberry நிறுவனம் தனது Blackberry 10 Mobile அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த Blackberry 10 பதிப்பு மொபைலில் குரல் அடிப்படையிலான பயன்பாடு அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது நம்முடைய பேச்சை உணர்ந்து அதற்கு தகுந்தாற் போல் இந்த செல்பேசி செயல்படும். நமது பேச்சின் வழியாக கட்டளைகளை இடும்போது அதைப் புரிந்துக்கொண்டு இந்த செல்பேசி செயல்படும். இந்த தொழில்நுட்பத்திற்கு பேச்சுணரி பயன்படுகிறது.

Apple Mobile களில் உள்ள Audio வைப்போன்றதொரு ஒலிநயத்துடன் கூடிய ஆடியோ அமைப்பும் இதில் அமைந்திருப்பது சிறப்பு.

மேலும் பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த Blackberry 10 Mobile-ஐப் பற்றி அறிய இந்த வீடியோவைக் காணுங்கள்...



காது கேட்காதவர்களுக்கும் செல்போனை பயன்படுத்த புதிய தொழில்நுட்பம்

(New cellphone technology for Deafness person)

காது கேட்காதவர்களும் தற்போது செல்போனைப் பயன்படுத்த முடியும் என்று புதுக்கோட்டை மாணவர்கள் கண்டுபிடித்த கருவியின் மூலம் நிரூபித்து வருகின்றனர்.


இவர்கள் கண்டுப்பிடித்த கருவியின் காதுகேட்காதவர்களும், செல்போனை பயன்படுத்தி  கேட்க முடிவதோடு மட்டுமல்லாமல், பாடல்களையும் கேட்க முடியும் என்பது கூடுதல் தகவல்...


இக்கருவி இயங்குவிதம்: 

Head Phone போலவே தோற்றமளிக்கும் இக்கருவியானது, ஒரு சிறிய மோட்டாரைக் கொண்டுள்ளது. இக்கருவியை செல்போனுடன் இணைத்து பேசும்போதே ஏற்படும் அதிர்வுகளால் காதுகேட்காதவர்களுக்கும் பேச்சை கேட்க முடியும் என்ற அடிப்படையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சாதாரணமாகவே மனிதனின் காது, மூக்கு, தொண்டை ஆகிவயைகள் ஒரே நரம்புத் தொகுப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் இணைக்கும் பல் இத்தொழில்நுட்பத்திற்கு உதவுகிறது. அதாவது கருவியில் உள்ள Stick போன்ற அமைப்பு தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இதனால் காது கேட்காதவர்கள் ஒலியை கேட்க முடிகிறது.

இக்கருவியை எந்த வகையான Cellphone உடனும் இணைத்துப் பயன்படுத்தலாம் என்று கூடுதல் வசதி. பேட்டரியில் இயங்க கூடிய இக்கருவிக்கான காப்புரிமை (Patent) வாங்க தற்போது முயற்சிகள் செய்துவருகின்றன. காப்புரிமை கிடைத்துவிட்டால் குறைந்த விலையில் இத்தயாரிப்பு கிடைக்கும். காதுகேட்காத நண்பர்களுக்கும் இது மிகச்சிறந்த மாற்று உபகரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..

பேஸ்புக் வீழ்ச்சிக்கு எட்டே எட்டு வருடம்...!

ஒரு அதிர்ச்சி தகவலையும் இங்கு பகிரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் எட்டே எட்டு வருடங்களில் பேஸ்புக் இருக்கும் இடம் இல்லாமல் போகும் என்ற அதிர்ச்சித் தகவலையும் வல்லுநனர்கள் வெளியிட்டுள்ளனர். 
ஒரு காலத்தில் இணைய ஜாம்பவனாக வலம் வந்த Yahoo நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலையே Facbook-க்கிற்கும் ஏற்படும் என தெரிகிறது. 
ஃபேஸ்புக்கிற்கு சரியான போட்டியாக களம்மிறங்கிய Google + அதை தகர்த்தெரியும் என்று கணித்துள்ளனர். 
பேஸ்புக்(FaceBook) சமீபத்தியில் பங்குசந்தை வர்த்தகத்தில் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
பல மில்லியன் பயனர்களைக் கொண்ட பேஸ்புக் வீழ்ச்சியடைந்தாலும், அதனுடைய பயனர்களை இழக்காமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. 
நன்றி நண்பர்களே..!
 

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz