Monday 18 March 2013

சரியான முறையில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி?

anbhudanchellam

நண்பர்கள் சிலர் அனுப்பும் மெயில்களை திறந்து பார்த்தால் ஒரு பெரிய நியூஸ்பேப்பர் அளவுக்கு அவர்கள் யாருக்கெல்லாம் அந்த மெயில் அனுப்பி உள்ளனர் என்று இருக்கும்.அதை எல்லாம் தாண்டி வந்து படிப்பதற்குள்  போதும் போதும் என ஆகி விடும்.
இதை தவிர்த்து நீங்கள் யாருக்கெல்லாம் அனுப்பி உள்ளீர்கள் என்பதை  எப்படி மறைப்பது என இந்த பதிவில் காணலாம்.

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.

சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??

Cc: Carbon Copy 

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப  நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.

இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி டி , Cc யில் மற்றவர் டி.

இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  

உதாரணம்

http://3.bp.blogspot.com/-iPBjg1fWFLI/Tc-19uzKzII/AAAAAAAAAvs/B7aZL5rfACY/s1600/Cc.jpg

Bcc: Blind Carbon Copy 

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.

இது பாதுகாப்பானதும் கூடஇது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.

Bcc
யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

உதாரணம்

http://3.bp.blogspot.com/-DQyQG2tjHEU/Tc-220o_tdI/AAAAAAAAAvw/CjUQm2KLOgA/s320/Bcc.jpg

மேலே உள்ள Cc படத்தில்  போல எல்லா மெயில் ID  க்கும் தான் அனுப்பினேன். ஆனால் ஒன்று மட்டும் Bcc யில் உள்ளதை கவனிக்கவும்.

Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை

இப்போது தன்னுடைய புதிய பதிவுகளை விளம்பரப்படுத்த நிறைய நண்பர்கள் இந்த வேலையை செய்கிறார்கள். மெயில் அனுப்புவது சரி. இப்படி ஒரேடியாய் எல்லோரையும் To வில் மட்டும் போட்டு அனுப்புவது தவறு. இதன் மூலம் நிறைய Spam மெயில்கள் வருகின்றன.
- See more at: http://www.karpom.com/2011/05/gmail-tobcccc.html#sthash.qHKqYuzZ.dpuf



No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz