Sunday 10 March 2013

சுவாசித்தால் செல்போனை சார்ஜ் செய்யலாம்..!

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/10/by-breathing-new-charging-technology.html

இந்த செய்தியைப் படித்ததும் எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

மின்சாரம் பல இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்க முடியும் என்று நமக்குத் தெரியும்.

By breathing new charging technology for your phone

ஆனால் சுவாசித்தல் மூலம் மின்சாரத்தை பெற முடியும் என்று இந்த
தயாரிப்பு சொல்கிறது.



இந்த சாதனமானது  நாம் சுவாசிக்கும் காற்றை மின்சாரமாக மாற்றுகிறது. அவ்வாறு மாற்றப்படும் மின்சாரம் மூலம் நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகளில் உள்ள மின்கலனில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

இனி செல்போனை சார்ஜ் செய்வதற்காக மின்சாரம், சார்ஜர் என இருவேறு பொருட்கள் தேவையில்லை.

நாம் எங்கு சென்றாலும் கையோடு இந்த சாதனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்று தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீண்ட நேரப் பயணம் மேற்கொள்ளும்போது இதனை முகத்தில் மாட்டிக்கொண்டு செல்போனுக்கு சார்ஜ் செய்துவிடலாம்.

முகத்தில் மாட்டிக்கொள்ளக்கூடிய வகையில் இச்சாதனத்தை பிரேசில் நாட்டைச் சார்ந்த ஜோகோ பவுலோ லமோக்லியோ என்பவர் உருவாக்கியுள்ளார்.

இனி எங்கு சென்றாலும் இச்சாதனத்தை கையுடன் எடுத்துச்சென்று செல்போனை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இருபத்தி நான்கு மணிநேரமும் இச்சாதனைத்தை இடைவிடாது பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தூசிகளை வடிகட்டும் மாஸ்காகவும் பயன்படும். அதே வேளையில் செல்போனுக்கும் சார்ஜராகவும் (மின்னேற்றி) பயன்படும்.

தொழில்நுட்பங்கள் தனது எல்லையை விரிவாக்கிக்கொண்டே போகிறது..

இன்னும் என்னென்ன மாயாஜாலங்களெல்லாம் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த பதிவுக்கு தொடர்புள்ள மற்றொரு பதிவும் நம்முடைய தங்கம்பழனி வலைத்தளதில் இருக்கிறது.

பாருங்கள்...!

கைவிரல்கள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் செய்யலாம்
இன்னும் நிறைய வித்தியாசமான தொழில்நுட்பங்கள் இருக்கிறது.. அவற்றை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.. 
நன்றி நண்பர்களே..!


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz