Saturday, 9 March 2013

புதிய பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன?




 



தலைப்பை பார்த்ததும் புதிய பதிவர்களுக்கு அறிவுரை கூறப்போகிறேன் என்று நினைக்க வேண்டாம். புதிதாக வலைப்பூ தொடங்கியவர்கள் முதலில் தொழில்நுட்பரீதியாக என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்ப்போம். இவைகளில் பல என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் (Frequently asked Questions) ஆகும்.


1. ப்ளாக் தொடங்குங்கள்

ப்ளாக் தொடங்குவது பற்றி புதியவர்களுக்காக ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற நெடுந்தொடர் (இப்படியும் சொல்லலாம்!) எழுதியுள்ளேன். அதில் ப்ளாக் பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

பிறகு முதல் பதிவை எழுதுங்கள். அதன் பின் பின்வருபவற்றை செய்யுங்கள்.

2. டெம்ப்ளேட் மாற்றுங்கள்

ப்ளாக்கர் தளத்திலேயே பல்வேறு டெம்ப்ளேட்கள் உள்ளன. அதில் Dynamic Template-களைத் தவிர வேறு ஏதாவது டெம்ப்ளேட்டை பயன்படுத்துங்கள். அதில் எதுவும் பிடிக்கவில்லை என்றால் மற்ற தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அது பற்றி ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி? என்ற பதிவில் பார்க்கவும்.

3. தலைப்பை மாற்றுங்கள்

புதிதாக  ப்ளாக் தொடங்கியவுடன் தலைப்பு குறிச்சொல் (Title Tag) "ப்ளாக் பெயர் >> பதிவு தலைப்பு" என்ற தோற்றத்தில் இருக்கும். அதனை தேடு இயந்திரங்களுக்கு (Search Engines) ஏற்றவாறு "பதிவு தலைப்பு >> ப்ளாக் பெயர்" என்று மாற்ற வேண்டும். இது பற்றி ப்ளாக்கின் தலைப்பை மாற்றிவிட்டீர்களா? என்ற பதிவில் பார்க்கவும்.

4. Meta Tags:

Meta Tags என்பது ப்ளாக் பற்றிய தகவல்களை கூகுள் தேடுபொறிகளுக்கு நிரல் மூலம் சொல்வது. இது பற்றி வாசகர்களை அதிகரிக்க Meta Tags என்ற பதிவில் சொல்லியிருந்தேன். ஆனால் அதை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதில் சொல்லப்பட்ட மூன்று Meta Tags:

Description - நம் தளத்தை பற்றிய குறிப்பு. இது பற்றி ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனி META TAG என்ற பதிவில் பார்க்கவும். அல்லது சகோதரி பொன்மலர் அவர்கள் ப்ளாக்கர் புதிய SEO வசதிகள் பற்றி எழுதிய பதிவில் உள்ள Meta Tags பகுதியை பாருங்கள்.

Keywords - தற்போது கூகுள் இந்த Meta Tag-ஐ ஏற்றுக் கொள்வதில்லை.

Author -பதிவு எழுதியவர்கள் பற்றி தேடுபொறிகளுக்கு சொல்வது. இந்த Meta Tag-ற்கு பதிலாக கூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம் என்ற  பதிவில் உள்ளபடி செய்யலாம்.

5. ப்ளாக்கை பிரபலப்படுத்துங்கள்:

நமது பிளாக்கை பிரபலப்படுத்துவது பற்றி நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? என்ற குறுந்தொடர் (இப்படியும் சொல்லலாம்!) எழுதியுள்ளேன். அதனையும் பார்க்கவும்.

6. திரட்டிகளை வரிசைப்படுத்துங்கள்

நாம் வைக்கும் திரட்டிகளை சீராக வைத்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இது பற்றி சகோ. பிரபு கிருஷ்ணா அவர்கள் எழுதிய திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்பது எப்படி? என்ற  பதிவை பார்க்கவும்.

7. முகவரி மாற்றம்:

ப்ளாக்கர் தளங்களின் முகவரி .com-லிருந்து .co.in, .co.uk, .com.au போன்று அந்தந்த நாடுகளுக்கு தகுந்தவாறு மாறியுள்ளதைப் பற்றி தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர் என்ற பதிவில் சொல்லியிருந்தேன். இந்த பிரச்சனைக்கு மூன்று தீர்வுகள் உள்ளது. ஒன்று blogspot முகவரியிலிருந்து சொந்த டொமைனுக்கு மாறுவது. அது பற்றி பிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி? என்ற பதிவில் பார்க்கலாம். இது அவசியம் இல்லை, விருப்பம் இருந்தால் செய்யலாம். (டொமைன் வாங்கியவர்கள் டொமைன் காலாவதி ஆவதற்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.)

ப்ளாக்கர் முகவரி மாற்றத்தினால் வரும் முக்கிய பிரச்சனை ஓட்டு பட்டைகள் சரியாக வேலை செய்யாது. அதற்கு தீர்வாக ஓட்டு பட்டைகளில் சில மாற்றங்கள் செய்தால் சரியாகிவிடும். இது பற்றி பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு என்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

இந்த  இரண்டையும்விட எளிமையான தீர்வு .co.in, .co.uk, .com.au என்று எந்த முகவரிக்கு சென்றாலும் நமது தளத்தை .com முகவரிக்கு திருப்பிவிடுவது. இது பற்றி சகோதரி பொன்மலர் அவர்கள் எழுதியுள்ள பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக் என்ற பதிவை அவசியம் பார்க்கவும்.

இன்று இது போதும் என நினைக்கிறேன். இறைவன் நாடினால் பதிவெழுத ஏதும் கிடைக்காத இன்னொரு அரிய சந்தர்ப்பத்தில் மேலும் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.



No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz