Monday 11 March 2013

திரட்டிகளைப் பயன்படுத்தும் விதம்.

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/07/blog-post_12.html
வணக்கம் நண்பர்களே..!

வலைப்பூ எழுதும் நண்பர்கள் தங்கள் வலைப்பூவின் வாசகர் எண்ணிக்கை அதிகரிக்க நாடுவது இந்த திரட்டிகளைத்தான்.


திரட்டிகள் என்றால் என்ன?
(What are the aggregators?)

இணைய உலகில் காணப்படும் வலைத்தளங்கள் அல்லது வலைப்பூக்கள் என்று சொல்லப்படுகிற பிளாக்கர் தளங்கள், தனியார் வலைத்தளங்களில் இடம்பெறக்கூடிய இடுகைகளை ஒரே இடத்தில் திரட்டி கொடுப்பவைதான் திரட்டிகள்.

தமிழ்த்திரட்டிகள்:
(Tamil aggregators)

திரட்டிகள் மொழிகளுக்கேற்ப வேறுபடுகின்றன. தமிழ்த் திரட்டிகள் என்று எடுத்துக்கொண்டால் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த்திரட்டிகள் இணைய உலகில் காணப்படுகின்றன.  திரட்டிகளிலும் வலைப்பதிவுகளை இணைத்து விடுவதன் மூலம், திரட்டிகளுக்கு வரும் வாசகர்கள்(Readers), பார்வையாளர்கள்(Visitors) திரட்டப்பட்ட பதிவுகளின் தலைப்பை கிளிக் செய்யும்போது,  பதிவிற்குரிய தளத்தை அடைகிறார்கள்.


இவ்வாறு ஒவ்வொரு வலைப்பூ அல்லது வலைத்தளத்திற்கான பார்வையாளர்களை இந்த திரட்டிகளின் மூலம் பெறலாம்.  இதுதான் திரட்டிகள் செய்யும் பணி.

திரட்டிகளின் வகைகள்:
(Types of aggregators)

தமிழ்த் திரட்டிகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நாமாகவே நம்முடையப் பதிவை அத்திரட்டிகளின் தளங்களுக்குச் சென்று இணைக்க வேண்டும். மற்றொரு வகை ஒரு முறை நம்முடைய தளத்தைத் திரட்டிகளில் பதிந்துவிட்டோமானால், அவைகள் தானியங்களாகச் செயல்பட்டு ஒவ்வொரு புதிய இடுகையையும் தானாகவே தங்கள் தளங்களில் சேகரித்து வைத்துவிடும்.

தற்போது தானியங்கியாக செயல்படும் திரட்டிகள் ஒன்றிரண்டுதான். மற்றவகை திரட்டிகள் அனைத்தும் ஒவ்வொரு புதிய இடுகையையும் நாமாகவே திரட்டித் தளங்களுக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும்.

தானியங்கியாக செயல்படும் திரட்டிகள்:

1. தமிழ்மணம்
(Tamilmanam)

தமிழ்மணம் தளத்தில் நீங்கள் உங்கள் வலைப்பூவை முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பிறகு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உறுதி செய்யும் இணைப்பை அனுப்புவார்கள்.மின்னஞ்சலில் இருக்கும் confirmation link- அழுத்தி உங்களுடைய வலைப்பூ இணைப்பதை உறுதி செய்ய பின்னர், உங்கள் வலைப்பூவானது தமிழ்மணத்தில் இணைப்பட்டுவிடும். மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் தமிழ்மணத் தளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டொரு நாளில் உங்களுக்கு உறுதி செய்யும் மின்னஞ்சல் வந்தடையும்.

தமிழ்மணத்திற்கான ஓட்டுப் பட்டை இணைக்கும் விதம்:

தமிழ்மணம் தளத்தைப் பொறுத்த வரையில் உங்கள் வலைப்பூவின் நிரல்வரிகளை முழுவதும் காப்பி செய்து அத்தளத்திலுள்ள பெட்டியில் இட்டு "அளி" என்ற பொத்தானைச் சொடுக்குவதன் மூலம் தமிழ்மணத்திற்கான ஓட்டுப்பட்டையுடன் கூடிய உங்கள் வலைப்பூவின் மொத்த நிரலையும் பெற முடியும்.

பிளாக்கர்(Bloger blog) தளங்களுக்கான ஓட்டுப்பட்டை பெற செல்ல வேண்டிய முகவரி: http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

நீங்கள் wordpress மென்பொருளைப் பயன்படுத்தும் வலைப்பதிவர்(wordpress blog) என்றால் செல்ல வேண்டிய முகவரி:
http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/wordpress.html
மற்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள் எனில் செல்ல வேண்டிய முகவரி:
http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/othersites.html
தமிழ்மணம் தளத்தில் உறுப்பினராக இந்த இணைப்பைச் சொடுக்கவும்.

2. தமிழ்வெளி:
(Tamilveli)
தமிழ்வெளித் தளத்திலும் மேற்கண்ட முறையில் உங்கள் வலைப்பூவை இணைக்கும் வழிமுறைகளைக் கொடுத்திருப்பார்கள். உங்கள் வலைப்பூவின் முகவரியைக் கொடுத்து தளத்தில் இணைத்தவுடன், உங்கள் திரட்டியில் இணைக்கப்படுவதற்கான உறுதி செய்யும் மின்னஞ்சல் உங்களுக்கு வந்தடையும். அதிலுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் உங்கள் தளமானது தமிழ்வெளியில் இணைந்துவிடும்.

பிறகு உங்கள் வலைப்பூவில் தமிழ்வெளித் தளத்திற்கான இணைப்புப் பட நிரலை இணைப்பதன் வாயிலாக தமிழ்வெளித் தளத்திற்கான இணைப்புபடம் உங்கள் தளத்தில் இணைக்கப்படுவிடும்.

பிறகு உங்கள் வலைப்பூவில் நீங்கள் ஒவ்வொரு புதிய இடுகையையும் எழுதி வெளியிட்ட பிறகு தளத்திலுள்ள தமிழ்வெளி இணைப்புப் படத்தை ஒரு முறை சொடுக்குவதன் மூலம் தானாகவே உங்கள்பதிவுகள் தமிழ்வெளித் தளத்தால் திரட்டப்படும்.

தமிழ்வெளியில் உறுப்பினராக இந்த இணைப்பைச்சொடுக்கவும்.

3. இன்ட்லி:
(Indli)
இந்த தளத்திலும் உங்கள் வலைப்பதிவை பதிய முதலில் தளத்தில் ஒரு கணக்கைத் துவங்க வேண்டும். இதற்கு பயனர் பெயர், மின்னஞ்சல்,கடவுச்சொல், மீண்டும் கடவுச்சொல் என்ற வரிசையில் தளத்தில் காணும் படிவத்தை நிரப்பி இறுதியில் create user என்ற பொத்தானைச் சொடுக்குவதன் மூலம் பயனர் கணக்கைப் பெறலாம்.

பயனர் கணக்கை உருவாக்கியவுடன் தளத்தில் உள்நுழைந்து உங்கள் வலைப்பதிவின் இடுகைகளின் Post Title URL கொடுத்து எந்த வகையானது என்பதைத் தேர்ந்தெடுத்து இடுகையை இணைக்கலாம்.

இன்ட்லி தளத்திற்கான ஓட்டுப்பட்டையையும், பின்தொடர்பவர் விட்ஜெட்டையும் பெற்று உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ளலாம்.
பிளாக்கரில் Indli தளத்தின் ஃபாலோவர் விட்ஜெட்(Followers widget) இணைப்பது எப்படி? என்பது இப் பதிவில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இன்ட்லி தளத்தில் உறுப்பினர் கணக்கைத் தொடங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்.

4. தமிழ்10:
(Tamil10)
இந்த தளத்திலும் மேற்சொன்ன முறையில் உங்களுக்கான கணக்கொன்றை தொடங்கவேண்டும். தமிழ்10 புதிய கணக்கைத் தொடங்க இங்கு செல்லவும். கணக்கதைத் தொடங்கியவுடன் மேற்சொன்ன முறையிலேயே உங்களுடைய பதிவுகளை இணைக்க வேண்டும். இந்த தளத்தில் ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில் மற்றவர்களின் பதிவுகள் மூன்றனுக்கு நீங்கள் ஓட்டளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு முறையும் தளத்தில் உள்நுழைந்து உங்கள் பதிவுகளை இணைக்கும் முன்பு ஏதேனும் மூன்றுப் பதிவுகளுக்கு ஓட்டளித்துவிட்டுதான் உங்கள் பதிவுகளை இணைக்குமாறு தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்10 தளத்தில் உறுப்பினர் கணக்கைத் தொடங்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

5. யுடான்ஸ்:
(Udanz)
புதிய வலைத்திரட்டியான யுடான்ஸ் மிகவிரைவில் வளர்ந்து வரும் திரட்டியாகும். இத்தளத்திலும் உங்களுக்கான புதிய கணக்கை உருவாக்கிக்கொண்டு மேற்சொன்னமுறையில் உங்கள் வலைப்பதிவிலுள்ள இடுகைகளை இணைக்கலாம்.

யுடான்ஸ் தளத்தில் உறுப்பினர் கணக்கைத் தொடங்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். 

குறிப்பு: ஒவ்வொரு தளத்திலும் உள்ள ஓட்டுப்பட்டைகளுக்கான நிரல்வரிகளை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்வதன் மூலம் ஓட்டுப்பட்டைகளை இணைக்க முடியும். ஓட்டுப்பட்டைகளை இணைப்பது குறித்து உள்ள நண்பர்களின் பதிவுகள் ஒரு சில:

1. நண்பர் அப்துல் பாசித்தின் பிளாக்கர்நண்பன் தளத்தில் உள்ள திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க என்ற பதிவைப் பார்க்கவும்.

2. "ஆளுங்க" என்ற அருன் எழுதிய பதிவுகளில் திரட்டிகளை அழகாய் அடுக்குவோம்!! என்றப் பதிவும் பயன்தரும்.

மேலும் முப்பதுக்கும் பல வலைத்திரட்டிகளை ஒரே இடத்தில் காண நமது தளத்தில் இடம்பெற்ற முந்தைய பதிவாகிய  உங்கள் பிளாக்கை பிரபலப்படுத்த 30 மேற்பட்ட திரட்டிகளின் தொகுப்பு(Popularize your blog) என்ற பதிவைப் பார்க்கவும்.


மேலும் திரட்டிகளைப் பற்றிய கூடுதல் தகவல்கள் ஏதேனும் விடுப்பட்டிருந்தால் நீங்களும் கருத்துரையின் வாயிலாகவும் தெரிக்கலாம். இதனால் பலரும் பயனடைய வாய்ப்புகள் உள்ளன. நன்றி நண்பர்களே..!


இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz